உலகம் விளையாட்டு

பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் கொரோனா நிவாரணத்திற்கு பெரிய அளவில் நன்கொடை…….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரியோ டி ஜெனிரோ:-

கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் பல்வேறு பிரபலங்கள் பெரும் தொகையை கொரோனா நிவாரண நிதியாக அளித்து வருகிறார்கள் .

இந்நிலையில் பிரேசில் கால்பந்து நட்சத்திரமும் பாரிஸ் செயிண்ட் – ஜெர்மெய்ன் (PSG) வீரருமான நெய்மர் கொரோனா வைரஸை எதிர்கொள்ள 10 லட்சம் டாலர்கள் நன்கொடை அளித்துள்ளார்.

இந்த நன்கொடையில் ஒரு பகுதி யூனிசெப் (ஐநா குழந்தைகள் நல நிதி)க்கும் மற்றொரு பகுதி நெய்மரின் நண்பரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான லூசியானோ ஹக் என்பவரது அறக்கட்டளைக்கும் செல்கிறது.

லூசியானோ 2022ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பிரேசில் அதிபர் தேர்தலில் அதிபர் வேட்பாளராக போட்டியிடுவார் என்று நம்பப்படுகிறது. இவர் ரியோ டி ஜெனிரோ மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தனது அறக்கட்டளை மூலமாக ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவருகிறார். தற்பொழுது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கும் உதவி வருகிறார்.

ALSO READ  முதல்வரின் கொரோனா நிதிக்கு ரூ.1 லட்சம் நிதி அளித்த ஐஸ்வர்யா ராஜேஷ் !

நெய்மர் தனது பாரிஸ் செயிண்ட் – ஜெர்மெய்ன் அணியின் சக வீரரான கைலியன் மாபே-யை (Kylian Mbappe) பின்பற்றி இந்த நிவாரண நிதியை அளித்துள்ளார். மாபே கடந்த மாதம் பிரஞ்ச் அறக்கட்டளை ஒன்றிற்கு கொரோனா நிவாரண நிதியாக பெரும்தொகை ஒன்றினை அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  ஒரே நாளில் 53 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு !

நெய்மர் தற்பொழுது மன்கரடிபா-வில் (Mangaratiba) உள்ள தனது சொகுசு பங்களாவில் தனிமையில் உள்ளார்.

நெய்மர் உலகிலேயே அதிகமாக சம்பாதிக்கும் கால்பந்து வீரர்களில் முன்னிலை வகிப்பவர். மாதம் ஒன்றுக்கு நெய்மரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 3.2 மில்லியன் டாலர்களாகும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா லாக்டவுனில் குடும்பமே சேர்ந்து செய்த காரியம்!

naveen santhakumar

இதெல்லாம் ஒரு தோல்வியா…நாளைக்கு பாருங்க…

Admin

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் 303 பேர் கொல்லப்பட்டனர் :

Shobika