உலகம்

சீனாவில் மீண்டும் நடனமாடும் கொரோனா:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பீஜிங் : 

சீனாவில் இரண்டு மாத இடைவெளிக்கு பின் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் கிங்டாவோ நகரில் வசிக்கும் 9 லட்சம் பேருக்கும் பரிசோதனை நடத்த, சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவில், 85 ஆயிரத்து 578 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 4,634 பேர் இறந்தனர்.அதன்பின், அரசின் தீவிர நடவடிக்கைகளால் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்திருந்தது. ஆகஸ்டில் மாதத்தில் ஜின்ஜியாங் மாகாணத்தின் உரும்கி நகரில், நான்கு பேரிடம் பாதிப்பு உறுதியானது. அதனை தொடர்ந்து, பிற நாடுகளில் இருந்து வந்தவர்களிடம் மட்டுமே, கொரோனா கண்டறியப்பட்டது.

ALSO READ  உலக குடும்ப பணம் அனுப்புதல் தினம்…

இதனால், கடந்த இரு மாதங்களாக நாட்டில் தொற்று பரவல் இல்லை என அறிவிக்கப்பட்டதுடன், வணிக நிறுவனங்களுக்கான தடைகள் முற்றிலும் நீக்கப்பட்டன.இந்நிலையில் கிழக்கு சாண்டோங் மாகாணத்தின் முக்கிய நகரான கிங்டாவோவில், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் எட்டு நோயாளிகள் உட்பட ஒன்பது பேரிடம், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

புதிய தொற்றுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தேசிய சுகாதார ஆணையம் கூறியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெளிநாட்டினர் வருவதற்கான தடை நீட்டிப்பு…! 

naveen santhakumar

அபாரதத்திற்கு பதில் முத்தம் அளித்த பெண்..!

News Editor

நோய் எதிர்ப்பு சக்திஅதிகரிக்க இயற்கை தீர்வு… விந்தணுக்களை குடிக்கும் விநோத பெண்..

naveen santhakumar