உலகம்

பிரபல ஆப்பிள் நாளிதழ் மூடப்பட்டது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆப்பிள் நாளிதழ் ஹாங் காங் நகரில் 20 ஜூன் 1995 இல் ஆடை தொழிலதிபர் ஜிம்மி லாய் என்பவரால் நிறுவப்பட்டது. ஜிம்மி லாய்க்கு சொந்தமான மற்றொரு வெளியீடான நெக்ஸ்ட் இதழின் வெற்றிக்குப் பிறகு, ஆப்பிள் நாளிதழை 700 மில்லியன் டாலர் மூலதனத்துடன் தொடங்கினார்.

ஆப்பிள் நாளிதழ் மோசமான பொருளாதாரம் மற்றும் சீன மொழி செய்தித்தாள் சந்தைக்கு எதிராக தொடங்கப்பட்டது. ஹாங் காங் நகரில் ஆப்பிள் நாளிதழ் வெளியிட்ட முதல் நாளில் 2,00,000 பிரதிகள் விற்று இரண்டாவது அதிகபட்ச செய்தித்தாளாக உருவெடுத்தது.

மார்ச் 2015 இல், இப் யூட்-கின் ஐ தலைமை செய்தி ஆசிரியர் ஐ மாற்றி சான் புய்-மேன் பத்திரிகையின் முதல் பெண் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

ALSO READ  அசத்தல் ஐடியா!! காடுகளை அழிக்காமல் உருவாக்கப்பட்ட மேம்பாலங்கள்… 

2020 ஆம் ஆண்டில், ஆப்பிள் நாளிதழ் அதன் டிஜிட்டல் வடிவில் ஆங்கில பதிப்பை அறிமுகப்படுத்தியது. இது 86,000 க்கும் மேற்பட்ட பிரதிகள் அச்சு வடிவில் செய்தித்தாளை அச்சிட்டு விற்பனை செய்து கொண்டிருந்தது, மேலும் அதன் வலைத்தளமானது ஹாங்காங்கில் சுமார் 9.6 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டிருந்தது.

இதழின் நிறுவனர் ஜிம்மி லாய் ஹாங்காங்கில் ஜனநாயக சார்பு இயக்கத்தை ஆதரித்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டர்.

Hong Kong pro-democracy paper Apple Daily confirms closure after authorities freeze assests

தொடர்ந்து அலுவலகங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டன, அதன் கணக்குகள் முடக்கப்பட்டன இதழின் ஆசிரியர் ரியான் லா மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சியுங் கிம்-ஹங் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

ALSO READ  கொரோனா தொற்று இல்லையென்றாலும் கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்-துபாய் அரசு அதிரடி

இதன் காரணமாக ஆப்பிள் நாளிதழ் ஜூன் மாதம் 23 தேதி பத்திரிகையை மூடுவதாக அறிவித்தது. ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நாளிதழ் மூடப்படும் என்றும், ஜூன் 24 முதல் இதழ் வெளிவராது என்று அறிவித்தது.

‘ஹாங்காங்கின் சமீபத்திய வரலாற்றில் ஊடக சுதந்திரத்திற்கான கறுப்பு நாள்” என்று ஆப்பிள் நாளிதழ் மூடப்படுவது குறித்து அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வயிற்றுக்குள் போன பாலியல் பொம்மை.. X-Ray வில் உண்மை..வைரலாகும் பதிவு….

naveen santhakumar

யார் இந்த ஆன்டிஃபாக்கள்?? ஆன்டிஃபாவை தடை செய்ய துடிக்கும் டிரம்ப்…!! 

naveen santhakumar

இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரி சஜித் ஜாவித்திற்கு கொரோனா :

Shobika