உலகம்

அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு உயரிய பதவி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக தமிழக வம்சாவளி கமலா ஹாரிசும் பதவியேற்றுக் கொண்டனர். 78 வயதாகும் ஜோபைடன் அமெரிக்க வரலாற்றில் மிகவும் வயதான அதிபர் என்ற பெருமைக்குரியவர். இந்நிலையில் ஜோ பைடன் அமெரிக்கா அதிபராக பதவி ஏற்ற முதல்நாளில் இருந்து பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

அந்தவகையில் ஜோ பைடனின் உரை ஆசிரியராக இந்திய வம்சாவளியை சேர்ந்த வினய் ரெட்டி நியமித்து உத்தரவிட்டுள்ளார். இவர் தெலங்கானா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்.

இந்நிலையில் அமெரிக்காவில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவருக்கு உயர் பதவி கிடைத்துள்ளதை அம்மாநில மக்கள் கொண்டாடி வருகின்றனர். வினய் ரெட்டியின் தந்தை மருத்துவம் படித்துள்ளார். மருத்துவம் படித்த அவர் அதன்பிறகு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்துள்ளார்.

ALSO READ  திமுக பிரமுகரிடம் கொல்லையடித்த மர்ம நபர் கைது !

இதற்கு முன்னதாக அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் உரை ஆசிரியராக வினய் ரெட்டி இருந்துள்ளார். அதேபோல் பிரச்சார நேரத்தில் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு உதவி செய்துள்ளார். அமெரிக்காவில் வாழ்ந்து வந்தாலும், தங்கள் பூர்வீகத்தை மறக்காமல், கிராம மக்களுக்கு தேவையான உதவிகளை வினய் ரெட்டியின் குடும்பத்தினர் செய்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்காவில் பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு..

Shanthi

சீனாவால் பின்னுக்கு தள்ளப்பட்ட தமிழை மீட்டெடுத்த செந்தில் தொண்டமான் !

naveen santhakumar

கூட்டத்தில் பெண் டிக்டாக் பிரபலத்தின் ஆடைகளை கிழித்த கும்பல் :

Shobika