உலகம்

கொரோனாவா we don’t care: ஜாலியாக இருக்கும் ஐரோப்பிய நாடு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஸ்டாக்ஹோம்:-

உலகை மிரட்டி வரும் கோரோனா வைரஸுக்கு இதுவரை 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் 40,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தக் கொடிய கொடிய வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திண்டாடி வருகிறது.

குறிப்பாக கொரோனா வைரஸ் அதிகளவு பாதிக்கப்பட்ட கண்டமாக ஐரோப்பா திகழ்கிறது. இதனால் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் மக்கள் நடமாட்டத்திற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பெரும்பாலும் அனைவரும் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

ஆனால் ஒரே ஒரு நாடு மட்டும் எந்தவிதமான கட்டுப்பாடுகளும், பதற்றமும் இன்றி இயல்பு வாழ்க்கை மேற்கொண்டுள்ளது. 

அந்த நாடு வேறு எந்த நாடும் அல்ல ஸ்வீடன் தான் ஸ்வீடன் தற்பொழுது பனிக்காலம் முடிந்து கோடை காலத்தை வரவேற்று கொண்டாடி வருகிறது.

ஸ்வீடனில் எந்த கட்டுப்பாடுகளோ அல்லது ஊரடங்கு உத்தரவோ பிறப்பிக்கப்படவில்லை. ஆனால் மக்கள் 50 பேருக்கு மேல் ஒன்று கூடுவதற்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகள் மூடப்படவில்லை, பொது போக்குவரத்து தாராளமாக இயங்குகிறது, பார் எதுவும் மூடப்படவில்லை. 

ALSO READ  நீதிமன்ற உத்தரவால் இந்தியன் 2 பட பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது !

சரி அப்படியானால் ஸ்வீடனில் கொரோனாவால் பாதிக்கப்படவில்லையா?? என்றால், இதுவரை ஸ்வீடனில் 4,535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 180-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இதுவரை 16 பேர் தான் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

ஆனால் ஸ்வீடனில் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. முன்பைவிட மக்கள் நடமாட்டம் பாதி அளவு குறைந்துள்ளது பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய சொல்லி அறிவுறுத்தியுள்ளது. 

இதேபோல் ஒருவர் இந்நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலோ அல்லது வயதானவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர் அதே போல அடிக்கடி கைகள் மற்றும் முகங்களை கழுவ சொல்லியும் தேவையற்ற பயணங்களை குறைத்து வீட்டிலிருந்தபடியே வேலை செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

ALSO READ  இன்று உலக அருங்காட்சியக தினம் அருங்காட்சியகங்கள் குறித்து அறிந்து கொள்வோம்... 

இதுகுறித்து கூறிய ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென் (Stefan Löfven):-

பெரியவர்கள் பெரியவர்களைப் போல நடந்து கொள்ளுமாறும் தேவையற்ற அச்ச உணர்வோ அல்லது வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே நோபல் ஃபவுண்டேஷன் சேர்மன் கார்ல் ஹென்றிக் ஹெல்டின் (Carl-Henrik Heldin) உட்பட

இரண்டாயிரம் டாக்டர்கள், விஞ்ஞானிகள், அதிகாரிகள், ப்ரொபசர்கள் அரசாங்கத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் போதுமான சோதனைகளையோ, போதுமான தனிமைப்படுத்தல்களையோ, போதுமான கண்காணிப்பு நடவடிக்கைகளையோ மேற்கொள்ளவில்லை. இவ்வாறு செய்வது மிகப்பெரும் பேரிடருக்கு இட்டுச் செல்லும் என்று கூறியுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சார்லி சாப்ளின் எனும் சரித்திர சகாப்தம்

Admin

வோட்காவை குடிங்க கொரோனாவை விரட்டுங்க: அதிபரின் அதிரடி யோசனை! 

naveen santhakumar

ஈரானில் பரபரப்பு: மிகப்பெரிய போர்க்கப்பல் தீப்பிடித்து, கடலில் மூழ்கியது…!

naveen santhakumar