உலகம்

சவுதியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரியாத்: 

சவுதியில் முதன் முறையாக நடைபெறும் ஜி 20 மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் கலந்துரையாடினார்.

சவுதி அரேபியாவில் ஜி 20 மாநாடு முதன்முறையாக நடைபெறுகிறது. தலைநகர் ரியாத்தில் கடந்த செப்டம்பர்  மாதம் 28-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இந்த மாநாடு இன்று (நவம்பர்-21-ம் தேதி) துவங்கியது.

ALSO READ  கொரோனா தொற்று 3வது அலை: நோய் தொற்றுக்கான அறிகுறிகள் மாறுபட்டுள்ளன : பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை

இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் கலந்து கொண்டார். சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் உச்சிமாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார்.
அனைவருக்கும் 21 ம் நூற்றாண்டின் வாய்ப்புகளை உணர்ந்து கொள்வது என்ற தலைப்பின் கீழ் மாநாடு நடைபெறுகிறது.

கூட்டத்தில் காலநிலை மாற்றம் குறித்தும், பெண்கள் மற்றும் இளைஞர்கள் வளரக்கூடிய நிலைமைகளை உருவாக்குதல், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் நன்மைகளை பகிர்ந்து கொள்ள தைரியமான உத்திகளை கடைபிடித்தல் போன்ற தலைப்புகளில் மாநாடு நடைபெறுகிறது.இந்த மாநாட்டில் 19 நாடுகள் அங்கம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் அசத்தலான ‘டெஸ்ட் கிட்’ :

naveen santhakumar

அமெரிக்காவில் பெண் டாக்டரை சுட்டுக்கொன்று விட்டு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆண் டாக்டர் தற்கொலை:

naveen santhakumar

வீழ்ந்தது ஆப்கன்- நாட்டை விட்டு ஓடும் மக்கள்

naveen santhakumar