உலகம்

Angry Birds படத்தில் வரும் பன்றி போன்ற 3000 ஆண்டுகள் பழமையான பன்றி பொம்மை அகழ்வாய்வில் கண்டெடுப்பு… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

குவான்கான்:-

Angry Birds கேம்கள் மற்றும் படம் மிகவும் பிரபலமானது. இந்நிலையில் இந்த படத்தில் வரும் பச்சை நிற பன்றிகள் போன்ற முகத்துடன் கூடிய மூவாயிரம் ஆண்டுகள் பழமையான பன்றி பொம்மை ஒன்று சீனாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு சீனாவில் அமைந்துள்ள சின்சுவான் மாகாணத்தின் அருகில் குவான்கான் (Guanghan) நகரில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் இந்த பன்றி பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது மூவாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து சிச்சுவான் மாகாணத்தில் (Sichuan Province) உள்ள குவான்கான் (Guanghan) அருகே நான்ஃபெங் நகர் (Nanfeng) அருகேயுள்ள கிராமத்தில் லியான்ஹே (Lianhe) கிராமத்தில் உள்ள  லியோன்ஹே இடிபாடுகளில் (Lianhe Ruins) அகழ்வாய்வுகள் நடைபெற்று வருகிறது இந்த அகழ்வாய்வினை சிம்சோன் மாகாண கலாச்சார நினைவுச்சின்னங்கள் மற்றும் அகழ்வாராய்ச்சி நிறுவனம் (Sichuan Provincial Cultural Relics and Archaeology Research Institute), டேயாங் நகராட்சி கலாச்சார நினைவுச்சின்னங்கள் மற்றும் அகழ்வாராய்ச்சி நிறுவனம் (Deyang Municipal Cultural Relics and Archaeology Research Institute), குவான்கான் கலாச்சார நினைவுச் சின்னங்கள் நிர்வாகம் (Guanghan Municipal Cultural Relic Administration) ஆகியவை இணைந்து மேற்கொண்டு வருகிறது.

ஒளியாண்டு இடிபாடுகள் உள்ள பகுதியில் 7000 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது இதனிடையே இந்த அகழ்வாராய்ச்சியில் பல்வேறு புராதன பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன அவற்றில் மண்ணால் செய்யப்பட்ட பன்றி ஒன்றின் பொம்மையும் கண்டெடுக்கப்பட்டது இந்தப் பன்றி பொம்மையின் முகம் அச்சு அசலாக ஆங்கிரி பேர்ட்ஸ் படத்தில் வரும் பச்சை நிற பன்றிகளின் முகத்தோடு ஒத்துப் போய் உள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. 

ALSO READ  கனடாவில் கடும் வெப்பம்....பலர் உயிரிழப்பு....பலர் பாதிப்பு....!!!!

இந்த அகழ்வாராய்ச்சியில் மேற்கொண்டுவரும் ஆய்வாளர்கள் இதுகுறித்து கூறுகையில்:-

இந்த பன்றி பொம்மை ஆபரணத்தில் ஒன்றின் பாகம் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் இது எந்தவிதமான ஆபரணம் என்பது தெரியவில்லை. இது தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்த பன்றி பொம்மை பார்ப்பதற்கு அச்சு அசலாக ‘ஆங்ரி பேர்ட்ஸ்’ திரைப்படத்தில் வருவதைப் போன்றே இருப்பதுதான் என்று கூறினார்.

ALSO READ  சீனாவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி கொண்டாடிய பீர் திருவிழா...

இதுகுறித்த தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பச்சை நிற பன்றிகள் சீனாவில் தான் உருவானது. இவை ஒரு காலத்தில் சீனா முழுதும் இருந்துள்ளது என்று கிண்டலாக கூறி வருகிறார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவிற்கு அஞ்சி விமான நிலையத்திற்குள் 3 மாதங்களாக ஒளிந்திருந்த நபர்:

naveen santhakumar

ஹிந்து மதத்தை இழிவு செய்யும் வகையில் புத்தகத்தில் இடம்பெற்ற கருத்து:

naveen santhakumar

பாகிஸ்தானில் மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டு விபத்து….

Shobika