அரசியல் உலகம்

பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நடத்திய பேரணியின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் இம்ரான் கான் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டு அரசுக்கு எதிராக வரிசாபாத் நகரில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் இம்ரான்கான் வலது காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. அவருடன் சேர்ந்து பி.டி.ஐ கட்சியைச் சேர்ந்த முன்னணி தலைவர்களான ஃபைசல் ஜாவெத், அகமது சத்தா உள்பட 4 பேருக்கு குண்டு காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இம்ரான் கான் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share
ALSO READ  பாகிஸ்தானில் கொட்டித்தீர்த்த கனமழையால் 10 பேர் உயிரிழப்பு…
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அன்று’ஹேராம்’ பேசிய கதைக்கரு உண்மையாகி வருவதில் வருத்தமே- கமல்

naveen santhakumar

கமல்ஹாசன் தான் எங்கள் முதல்வர் வேட்பாளர்-சரத்குமார் அறிவிப்பு !

News Editor

துனிசியாவில் துயரம்….43 பேர் பலி…

Shobika