உலகம்

பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்பட சமூக வலைத்தளங்கள் அனைத்தும் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடெல்லி

இந்தியா உள்பட பல நாடுகளில் திடீரென பேஸ்புக் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்பட சமூக வலைத்தளங்கள் அனைத்தும் நேற்று இரவு முடங்கின. சமூக வலைத்தள முடக்கம்மகாரணமாக பயனாளர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

Facebook Says Services, Including Instagram and WhatsApp, Being Restored  After Outage – NBC New York

ஸ்மார்ட்போன்கள் உதவியுடன் அன்றாட உலக நடப்புகளை அறிந்து கொள்ளவும் இன்னும் பல தேவைகளுக்கு பேஸ்புக் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் மக்களுக்கு கைகொடுத்து வருகின்றது.

இளைங்கல்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரின் அன்றாட பொழுதுபோக்கு மட்டுமின்றி பயன்பாட்டு சாதனமாகவும் சமூக வலைத்தளங்கள் மாறிவிட்டன என்பதே உண்மை. பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என பல்வேறு சமூக வலைத்தளங்கள் மக்களின் வாழ்க்கையில் இரண்டற கலந்து விட்ட நிலையில் திடீரென ஏற்பட்ட முடக்கம் காரணமாக அனைத்துத் தரப்பினரும் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார்கள்,

Philip N Howard: 'Social media need a radical rebuild' | Life and style |  The Guardian

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தடங்கல் ஏற்பட்டதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்து இருந்தது. இன்று அதிகாலை முதல் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் மீண்டும் செயல்பட தொடங்கியது.

ALSO READ  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ப்ரியா பவானி சங்கரின் பதிவு…!

பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் மார்க் ஜுக்கர்பெர்க் தனது பேஸ்புக் பக்கத்தில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் இப்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இன்று ஏற்பட்ட இடையூறுக்கு மன்னிக்கவும் – நீங்கள் அக்கறை கொண்டவர்களுடன் தொடர்பில் இருக்க எங்கள் சேவைகளை நீங்கள் எவ்வளவு நம்பியிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும் என்று அவர் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாஸ்க் அணியாமல் வந்தால் அனுமதி இல்லை….தாய்லாந்தில் சூப்பர் கதவு…

naveen santhakumar

கொரோனா தடுப்பு மருந்தான பைசரின் முதல் டோஸ் ஜோ பிடனுக்கு செலுத்தப்பட்டது:

naveen santhakumar

பிரபலமான சாம்சங் நிறுவனத்தின் தலைவர் காலமானார்:

naveen santhakumar