உலகம்

சர்ச்சில் தெளிக்கப்பட்ட புனித நீரால் பரவிய கொரோனா….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சியோல்:-

தென் கொரியாவில் உள்ள சியோங்னமில் உள்ள தி கிரேஸ் ரிவர் தேவாலயத்தில் மார்ச் 8ம் தேதி, கொரோனாவை தடுக்க சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

இதில் 135 பேர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். இந்த வழிபாட்டின் முடிவில் அனைவருக்கும் ஒரே பாட்டிலில் புனித நீர் (உப்பு கலந்த நீர்) வழங்கப்பட்டது. பாட்டிலில் இருந்த புனிதநீரை வாய்க்குள் படும்படி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

ALSO READ  சூட்கேசுக்குள் நண்பனை அடைத்த மாணவன்… சிக்கியது எப்படி...
Courtesy.

இந்நிலையில் வழிப்பாட்டில் பங்கேற்றவர்கள் அடுத்தடுத்து உடல்நிலை சரியில்லாமல் போனது. உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் உடல்நிலை சரியில்லாத நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் வழிப்பாட்டில் பங்கேற்றவர்களில் பாதிரியார், அவரது மனைவி உட்பட 46 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

புனித நீரை கையால் தொட்டு பாதிரியார் வாயில் ஊற்றி உள்ளார். இதன் மூலம் கொரோனா பரவியது தெரிய வந்துள்ளது.

ALSO READ  கொரோனா இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்; நடிகை கீர்த்தி சுரேஷ் !

இது குறித்து பாதிரியார் கிம் கூறுகையில், நடந்த சம்பவத்திற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எல்லா பழியையும் பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

இதுவரை தென்கொரியாவில் 8300 பேர்வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள்- செவிலியர்கள் போராட்டம்…….

naveen santhakumar

சீனாவின் வூஹான் ஆய்வுகூடத்தில் உருவாக்கப்பட்டதுதான் கொரோனா வைரஸ்- அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி….

naveen santhakumar

புயலுக்கு பெயர்களை பரிந்துரை செய்யும் நாடுகளுக்கான நிபந்தனைகள்:

naveen santhakumar