உலகம்

சீனாவின் வூஹான் ஆய்வுகூடத்தில் உருவாக்கப்பட்டதுதான் கொரோனா வைரஸ்- அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


பாரிஸ்:-

பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த  நுண்கிருமி ஆராய்ச்சியாளரும் நோபல் பரிசு பெற்றவருமான லூக் மான்டேக்னர் (Luc Montagnier) சீனாவில் உள்ள ஆய்வகங்களில் மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் கொரோனா வைரஸ் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

எய்ட்ஸ் நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் சீனாவிலுள்ள ஆய்வகங்களில் மனிதர்களால் இந்த கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக மாண்டேக்னர் கூறியுள்ளார்.

முதலில் இந்த வைரஸ் வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியது என்று கூறப்பட்டது. பின்னர் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனாவிலுள்ள ஆய்வகங்களில் இந்த வைரஸ் உருவாக்கப்பட்டது என்று கூறப்பட்டது. பின்னர் சீனா அமெரிக்கா இந்த வைரஸை தங்கள் நாட்டில் பரப்பியதாக கூறியது. மற்றுமொரு தகவலாக சீன ஆய்வகங்களில் இந்த வைரஸை உருவாக்குவதற்காக அமெரிக்கா நிதியுதவி அளித்தது என்று தகவல் வெளியானது. இந்நிலையில் சீனாவிலுள்ள ஆய்வுகளில் மனிதர்களால் தான் இந்த வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை மாண்டேக்னர் கூறியுள்ளார்.

இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு மருத்துவத்துறையில் எய்ட்ஸ்  எச்ஐவி (HIV) வைரஸை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  சீனாவின் ஜியோமி உட்பட 9 நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் சேர்ப்பு…...அமெரிக்கா அதிரடி…..

இதுகுறித்து கூறிய லூக் மாண்டேக்னர்:-

வூஹானில் உள்ள தேசிய பயோ சேஃப்டி ஆய்வுக்கூடத்தில் (Wuhan National Biosafety Laboratory) தற்செயலாக நிகழ்ந்த விபத்துக் காரணமாகவே இந்த வைரஸ் பரவி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 2000ஆம் ஆண்டு முதலே சீனா இதுபோன்ற கொரோனா வைரஸ் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

ALSO READ  சவுதியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு :

இதே குற்றச்சாட்டை ஆரம்பம் முதலே தொடர்ந்து கூறி வருகிறார்  அமெரிக்க அதிபர் டிரம்ப். முன்னதாக சீனா வேண்டுமென்றே இந்த வைரஸை பரப்பும் இருந்தால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மாண்டேக்னர் இதற்கு முன்னர் தனது இரண்டு கருத்துகளுக்காக அதிகமாக விமர்சிக்கப்பட்டார். ஒன்று DNA Teleportation எனப்படும் சர்ச்சைக்குரிய மற்றும் கடினமான மற்றும் அனுமாநிக்கப்பட்ட தேற்றமான டிஎன்ஏ மூலமாக மின்காந்த அலைகளை உமிழ வைக்க முடியும் கருத்தை முன்வைத்தார்.

DNA Teleportation

இரண்டாவதாக எய்ட்ஸ் மற்றும் பார்க்கின்சன் ஆகிய நோய்களை பப்பாளி மூலமாக குணப்படுத்த முடியும் என்று கூறினார் இந்த இரண்டு கருத்துக்களும் விஞ்ஞானிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டிஸ்னி நிறுவனம்…. ஆயிரக்கணக்கில் பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம்….

naveen santhakumar

ஒமைக்ரான் தொற்று அச்சம் : தடுப்பூசிகளை பதுக்கி வைக்கும் அபாயம் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

News Editor

கொரோனா வைரஸ் குறித்து முன்னரே போடப்பட்ட ட்விட், முன்னரே எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படம், முன்னரே எழுதப்பட்ட திகில் நாவல்….

naveen santhakumar