உலகம்

புயலுக்கு பெயர்களை பரிந்துரை செய்யும் நாடுகளுக்கான நிபந்தனைகள்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பொதுவாக ஒரு நாடு 13 பெயர்களை பரிந்துரை செய்ய வேண்டும்.பரிந்துரை செய்யப்பட்ட புயலுக்கான பெயரானது அரசியல், கலாச்சாரம், மத நம்பிக்கை கலக்காமல், எவரின் மனதையும் புண்படுத்தும் வகையில் அல்லாமல் இருக்க வேண்டும். 

மேலும், பெயரின் அளவு அதிகபட்சமாக 8 எழுத்துகளுக்குள் இருக்க வேண்டும்.எல்லா  மக்களாலும் எளிதில் உச்சரிக்கும்படியும் இருக்க வேண்டும். முக்கியமாக வட இந்திய பெருங்கடலில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பெயர்கள், மீண்டும் பயன்படுத்தபட முடியாது.

அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் உருவாகும் புயலுக்கு மாலத்தீவு பரிந்துரை செய்த ‘புரேவி’ என்னும் பெயர் சூட்டப்படும். இந்தியா, அடுத்து வர இருக்கும் புயல்களுக்கு  கதி, தேஜ், முரசு, ஆக், நீர் ஆகிய பெயர்களை சூட்ட பரிந்துரை செய்துள்ளது. 

ALSO READ  அரபு உலகின் செவ்வாய் கிரகத்துக்கான முதல் நம்பிக்கை விண்கலம் வெற்றி… 

அந்தந்த நாடுகள் பரிந்துரை செய்யும் புயலுக்கான 13 பெயர்கள் பட்டியலில் வரிசையாக இருக்கும். மொத்தமாக 169 பெயர்கள் இடம்பெற்றிருக்கும். அவற்றிலிருந்து ஒவ்வொரு புயலுக்கும் ஒவ்வொரு நாட்டின் பரிந்துரைப்படி அதில் இடம்பெற்றிருக்கும் பெயர்கள் பயன்படுத்தப்படும்.  இது போல அடுத்த 25 வருடங்களில் வரப்போகும் புயலுக்கான பெயர் பட்டியல் உலக வானிலை ஆராய்ச்சி மையத்திடம் தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜோ பிடனுடன் இணைந்து செயல்பட விரும்பும் விளாடிமிர் புடின்:

naveen santhakumar

பசியால் தவித்த குழந்தையின் அழுகுரலை கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்

Admin

டிக்டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிட்ட 5 பெண்களுக்கு 2 ஆண்டுகள் சிறை, 1.5 லட்சம் அபராதம்… 

naveen santhakumar