உலகம்

ஒரே Zoom வீடியோ கால்- 3000 பேர் வேலை இழப்பு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சான் பிரான்சிஸ்கோ:-

கொரோனா பரவல் அனைத்து விதமான தொழில் துறைகளையும் முற்றிலும் தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது. பல நிறுவன ஊழியர்கள் மிகப்பெரிய அளவில் வேலை இழப்புகள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரே வீடியோ கால் மூலமாக உபேர் நிறுவனம் 3700 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்துள்ளது.

உபேர் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள  பொருளாதார இழப்பு மற்றும் நிறுவனம் எதிர் நோக்கி இருக்கும் பொருளாதார சவால்கள் காரணமாக உபர் டெக்னாலஜிஸ் நிறுவனம் தனது பணியாளர்களில் 3700 பேரை பணி நீக்கம் செய்துள்ளது.

உபர் நிறுவன மேலாளர் தனது நிறுவன ஊழியர்களிடம் மேற்கொண்ட வீடியோ கால் அழைப்பில் இன்றே உபர் நிறுவனத்தில் உங்களது கடைசி வேலை நாள் என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து 3,700 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உபர் நிறுவனத்தில் Phoenix Center of Excellence தலைவர் Ruffin Chaveleau கூறுகையில்:-

ALSO READ  முழு ஊரடங்கு; 105 ரூபாய்க்கு வீடுதேடி வரும் காய்கறி பொருட்கள் !

உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் முற்றிலுமாக போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதன் காரணமாக உபர் நிறுவனம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது. எனவே தான் நிறுவனம் இத்தகைய கடினமான ஒரு முடிவு எடுத்துள்ளது வேறுவழியின்றி தன் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

இதனிடையே 30 நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி Khosrowshahi-க்கு

ALSO READ  அமெரிக்காவில் குழந்தைகளிடையே அதிகரித்து வரும் அரிய நோய் குறைபாடு...

இந்த வருடம் முழுவதும் அவருக்கான சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

கடந்து 2019ஆம் ஆண்டு அவரது சம்பளம் ஒரு மில்லியன் டாலர் ஆகும். இந்த ஆண்டு அவருக்கு இரண்டு மில்லியன் டாலர் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு இந்த ஒரு வருடத்திற்கான சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் நிறுவன ஊழியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள செய்தியில் நிறுவனம் மேலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று கூறியுள்ளார்.

உபர் நிறுவனம் மேற்கொண்ட இந்த வீடியோ கால் 3 நிமிடங்கள் நீடித்தது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சத்தீஷ்கரில் தடம் புரண்ட எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள்..

Shanthi

” Andra Tutto Bene”- “எல்லாம் சரியாகி விடும்” – இத்தாலி மக்கள் நம்பிக்கை…. 

naveen santhakumar

46,000 ஆண்டுகால பூர்வக்குடிகளின் பாரம்பரிய பாறைக்குகைகளை வெடி வைத்துத் தகர்த்த கார்பரேட் நிறுவனம்: பூர்வகுடிகள் கொந்தளிப்பு…

naveen santhakumar