உலகம்

தாய்ப்பாலால் மூச்சு திணறி துடிதுடித்த குழந்தை : காப்பாற்றிய காவலர்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிறந்து 21 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை காப்பாற்றியதன் மூலம் பிரேஸிலிய காவலர்கள் இருவர் ஹீரோக்களாக மாறியுள்ளனர்.

பிரேஸிலின் சாவ் பௌலோ நகரை சேர்ந்த எல்விஸ்- கிறிஸ்டினா மார்க்ஸ் தம்பதிகளின் ஆண் குழந்தை லூகாஸின் முகம் திடீரென இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியதோடு மூச்சுதிணலும் ஏற்பட்டு துடிதுடித்தது. உடனடியாக எர்மெலினோ மாடராஸ்ஸோ மருத்துவமனைக்கு விரைந்தனர் எல்விஸ் தம்பதியர்.

அங்கு பணியில் இருந்த பிரேஸிலிய இராணுவ காவல் அதிகாரிகள் இருவர் பிறந்து 21 நாட்களே ஆன லூகாஸூக்கு முதுகில் லேசாக தட்டி முதலுதவி அளித்தனர். ஒரு காவல் அதிகாரி குழந்தை லூகாஸ் முதுகில் தட்ட தட்ட மற்றொருவர் குழந்தை சுவாசிக்கின்றானா என கவனித்துக்கொண்டிருந்தார்.

ALSO READ  தொடர்ந்து உயரும் கொரோனா; அச்சத்தில் உலக மக்கள் !

இதனிடையே ஹெல்மில்ச் மனோவ்வர் என்ற பெண் காவல் அதிகாரி குழந்தையின் வாயோடு வாய் வைத்து முச்சை செலுத்தினர்.சிறிது நேரத்தில் குழந்தையின் கை கால்கள் அசையத்துவங்கியது. அடுத்த சில விநாடிகளில் கதறி அழத்தொடங்கியது.

இது குறித்து கூறிய லுகாஸின் தந்தை:-
என் மனைவி குழந்தைக்கு தாய்பாலுட்டிய சில நிமிடங்களில் இது நிகழ்ந்ததாக தெரிவித்தார். குழந்தையை குளிப்பாட்ட தயாரான போது முகம் இளஞ்சிவப்பாக மாறியதோடு மூச்சுதிணறல் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

ALSO READ  மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜாக்கி-உர்-ரஹ்மான் கைது..!
A baby girl wearing a cop hat.

மேலும் நாங்கள் மிகவும் அச்சத்தோடும் செய்வதறியாது தவித்தோம் இந்த ராணுவ காவலர்கள் தான் குழந்தையை காப்பாற்றினர். அவர்களுக்கு மிகவும் கடமைபட்டுள்ளோம்.

Cute little baby boy, relaxing in bed after bath, smiling happily, daytime

இந்நிகழ்வு உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது. ஹீரோக்களான இரு பிரேஸிலிய காவலர்கள் தியாகோ ட சூஸா மற்றும் ரெனாடோ டரோகோ . சமுகவலைதளங்களில் அவர்களக்கு தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆப்கானிஸ்தான் ராணுவ சோதனை சாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் :

Shobika

பாகிஸ்தானில் 15 வயது சிறுமியை கடத்தி தொடர்ந்து 24 மணிநேரம் கூட்டு பாலியல் வன்கொடுமை..

naveen santhakumar

பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு?

Shanthi