உலகம்

2070-க்குள் மூன்றில் ஒரு பங்கு உயிரினங்கள் அழியும்…ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

2070 ஆண்டிற்குள் காலநிலை மாற்றம் காரணமாக மூன்றில் ஒரு பங்கு விலங்கு மற்றும் தாவர இனங்கள் அழிந்து போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய அறிவியல் அகாடமியின் இதழான புரோசிடிங்ஸ்ல் வெளியிடப்பட்ட கட்டுரையில் , சமீபத்திய காலநிலை தொடர்பான ஆய்வில் சில தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.

அதில் மக்களை உயரும் வெப்பநிலையிலிருந்து தப்பிக்க எவ்வளவு விரைவாக நகர்த்த முடியும் என மதிப்பிடப்பட்டது. பின் அதை அனைத்து உயிரினங்களின் விகிதங்களோடு ஒப்பிட்டு பார்க்கும் போது, அவற்றின் அழிவு விகிதங்கள் குறித்த விரிவான மதிப்பீடுகளை கண்டுபிடித்துள்ளார்கள். இந்த ஆய்வில் விலங்கு மற்றும் தாவரங்களின் 538 இனங்களில் 44 சதவீதம் ஏற்கனவே ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் அழிந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

ALSO READ  கொரோனாவை கண்டறிய களமிறங்கும் மோப்ப நாய்கள்....

மேலும் வருடாந்திர வெப்பநிலையை கணக்கிடும் போது ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக வெப்பநிலை சிறிய மாற்றங்களை கண்டுள்ளது தெரியவந்தது. அதிகபட்ச வெப்பநிலையாக 0.5 டிகிரி செல்சியஸ்க்கு மேல் அதிகரித்தால் சுமார் 50 சதவீத இனங்களும், 2.9 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிகரித்தால் 95 சதவீதமும் அழிவை எதிர்நோக்கி இருக்கும் என்ற அதிர்ச்சி தகவல் கண்டுபிடிக்கப்பட்டது.

மனிதர்கள் வெப்பநிலை அதிகரிப்பை தொடர்ந்து ஏற்படுத்தினால், 2070 க்குள் பூமியில் உள்ள தாவர மற்றும் விலங்கு இனங்களை நாம் இழக்க நேரிடும் என ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரஷ்ய பிரதமருக்கு கொரோனா உறுதி….

naveen santhakumar

ஆக்சிஜன் இன்றி உயிர்வாழும் முதல் உயிரினம் கண்டுபிடிப்பு…..

naveen santhakumar

விரைவில் விற்பனைக்கு வரும் கஞ்சா பீட்சா – எங்கு தெரியுமா?

naveen santhakumar