உலகம்

ரஷ்ய பிரதமருக்கு கொரோனா உறுதி….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


மாஸ்கோ:-

ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டினுக்கு (54) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 8-வது இடத்தில் உள்ளது. 

ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,498 ஆக உயர்ந்துள்ளது, கொரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 1,073 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டின் (Mikhail Mishustin) நேற்று ஏப்ரல் 30 தனக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (Viladimir Putin) இடம் தெரிவித்துள்ளார்.

ALSO READ  கொரோனாவால் உயிருக்குப் போராடும் தாய்.... என் அம்மா பிழைக்க வேண்டும்.. கண்ணீர் விட்டுக் கதறிய சிறுமி...

இது குறித்து ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டின் கூறுகையில்:-

கொரோனா வைரஸ் சோதனையில், தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், தனது மற்ற அமைச்சரவை உறுப்பினர்களைப் பாதுகாக்க சுயமாக தனிமைப்படுத்தி கொள்ள உள்ளதாகவும் அவர் கூறினார்.

ALSO READ  ஆடிப் பாடி மக்களை மகிழ்வித்த ஸ்பெயின் நாட்டுப் போலீஸார்....

இதனிடையே துணைப்பிரதமர் ஆன்ட்ரே பெலவ்சௌ (Andrei Belousov) பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டினின் பொறுப்புகளை கவனிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

எனினும் முக்கிய விஷயங்களில் பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டினே முடிவு எடுப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காபூலில் குருத்வாரா மீது ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்- 27 சீக்கியர்கள் பலி….

naveen santhakumar

அட நம்ம, டிரம்ப் பயன்படுத்தும் காடிலாக் ஓன் (Cadillac One) காரில் இவ்வுளவு வசதிகளா??

naveen santhakumar

சிரியாவில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

Admin