மருத்துவம்

காலிஃப்ளவர் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா…?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காலிஃப்ளவர் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா…?

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் எளிதில் அனைவருக்கும் பிடித்து போகக்கூடிய பொருட்களில் ஒன்று காலிஃப்ளவர். இதில் இருக்கும் முழுமையான சத்துக்கள் நமக்குக் கிடைக்க வேண்டுமென்றால் அதனை 5 நிமிடத்திற்கு மேல் நெருப்பில் வதக்கவோ, வாட்டவோ கூடாது. நம் உடலுக்கு காலிஃப்ளவரால் பல்வேறு நன்மைகள் உள்ளன.

குறிப்பாக உடல் வலிமை மற்றும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்யும் தன்மை காலிஃப்ளவருக்கு உண்டு. மேலும்புற்று காலிபிளவர் புற்றுநோயை குறைப்பதிலும், தடுப்பதிலும் சிறப்பாக செயல்படுகின்றன. காலிஃப்ளவரில் சல்போரபேன் எனப்படும் வேதிப்பொருள் அதிகமுள்ளதால் இது புற்று நோய்களின் செல்களின் அடிப்படை வளர்ச்சியை அழிக்கிறது. குடல், ஈரல் சிறுநீர்ப்பை, மார்பகம் மற்றும் நுரையீரல்களில் ஏற்படும் புற்றுநோய்களை குணப்படுத்தும் சக்தியை காலிஃப்ளவர் கொண்டிருக்கிறது.

ALSO READ  ஏலக்காயின் ஏராளமான பயன்கள் :

காலிப்ளவரில் அதிகமாக நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேரவிடாமல் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்தின் நலனை பாதுகாக்கிறது. காலிஃப்ளவரில் காணப்படும் கோலைன் சத்து மூளையின் வளர்ச்சி மற்றும் செயலாக்க திறனுக்கு மிகவும் உதவுகிறது.

மூட்டுக்களில் வலி, வீக்கம் போன்ற பிரச்சினையால் அவதிப்பட்டவர்கள் காலிபிளவரை தொடர்ந்து சாப்பிட்டு வர, அதிலிருக்கும் பியூரின் வேதிப்பொருள் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கிறது.

ALSO READ  பற்களில் மஞ்சள் கறை இருக்கா ?அப்போ முதல்ல இத பண்ணுங்க

காலிபிளவரில் வைட்டமின் கே சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இதனை வாரத்திற்கு இரண்டு முறை உணவாக சாப்பிட்டால் எலும்புகள், பற்கள் போன்றவை வலிமை பெறுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தடுப்பூசியை சோதனை செய்கிறது பில்கேட்ஸ் அறக்கட்டளை….

naveen santhakumar

பற்களில் மஞ்சள் கறை இருக்கா ?அப்போ முதல்ல இத பண்ணுங்க

Admin

வாயுத்தொல்லையா????அப்போ இத ஒருதடவை டிரை பண்ணி பாருங்க:

naveen santhakumar