உலகம் மருத்துவம்

கொரோனா தடுப்பூசியை சோதனை செய்கிறது பில்கேட்ஸ் அறக்கட்டளை….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பென்சில்வேனியா:-

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள இனோவியோ (INOVIO) என்ற பயோடெக் நிறுவனம் கொரோனா தடுப்பூசியை சோதனை செய்கிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தனது அறக்கட்டளை மூலமாக கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்காக பல மில்லியன் டாலர் தொகையை செலவு செய்துள்ளார். இதில் 7 நிறுவனங்களின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து இருக்காக பெரும் தொகையை முதலீடு செய்துள்ளார். அதில் அதில் Inovio பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள INO-4800 DNA என்ற கொரோனா தடுப்பு மருந்தை இன்று சோதனை செய்கிறது.

இதன் முதற்கட்டமாக 40 ஆரோக்கியமான தன்னார்வலர்கள் மீது இந்த தடுப்பு மருந்தை சோதனை செய்ய உள்ளது. இந்த சோதனையை பிலடெல்பியாவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் (University of Pennsylvania) பெரெல்மேன் மருத்துவ பள்ளியிலும் (Perelman School of Medicine),

கன்சாஸ் நகரில் உள்ள பார்மசூட்டிக்கல் ஆராய்ச்சி மையத்திலும் நடைபெற உள்ளது. இந்த இரு இடங்களில் இந்த 40 தன்னார்வலர்களுக்கும் ஏற்கனவே மருத்துவ பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளது.

ALSO READ  சுத்தியலில் தங்கம் கடத்திய வாலிபர்..!

ஒவ்வொரு தன்னார்வலர்களும் 2 டோஸ்கள் (2 Doses) வீதம் நான்கு வாரங்களுக்கு அளிக்கப்பட உள்ளது. இதன் பின்னர் அவர்களின் நோய் எதிர்ப்பு திறனில் ஏற்படும் முன்னேற்றங்கள், அவர்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை பரிசோதிக்க உள்ளது.

Coalition for Epidemic Preparedness Innovations (CEPI) என்ற திட்டத்தின் மூலம் பில் கேட்ஸ் மற்றும் மெளிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் இதற்கான நிதியை வழங்குகிறது.

ALSO READ  மத்திய அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி !

இந்த நிறுவனம் ஏற்கனவே மெர்ஸ் (Middle East Respiratory Syndrome (MERS)) நோய்க்கான டிஎன்ஏ தடுப்பு (DNA vaccine) மருந்தை கண்டறிந்து சோதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆராய்ச்சிகள் வெற்றியடையும் பட்சத்தில் இந்த வருட இறுதிக்குள் ஒரு மில்லியனுக்கு அதிகமான தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட ஆராய்ச்சிகளுக்கு தேவைப்படும் 1000 டோஸ் தடுப்பு மருந்துகளை சில வாரங்களில் உற்பத்தி செய்ய உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

லண்டனில் அந்தரத்தில் தொங்குவது போன்ற தோற்றத்தில் குதூகலமான நீச்சல் குளம்…!!!

Shobika

உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2020…

naveen santhakumar

“சிங்கிள்” தான் கெத்து – தென்கொரிய பெண்களின் அதிரடி முடிவு

Admin