தமிழகம்

தொடரும் மாணவர்கள் தற்கொலை… சந்தேகத்தில் போலீஸ்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தொடரும் மாணவர்கள் தற்கொலை… சந்தேகத்தில் போலீஸ்…

சென்னை ஐஐடியில் முதலாம் ஆண்டு மாணவி படித்து வந்த பாத்திமா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகம் மற்றும் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பாத்திமாவின் தற்கொலையில் பேராசிரியர்கள் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு ஃபாத்திமாவின் தற்கொலை குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.

பாத்திமாவின் தற்கொலை சம்பவமே புதிராக உள்ள நிலையில், திருப்போரூரை அடுத்துள்ள காலவாக்கத்தில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. அதில் முதலாம் ஆண்டு படித்து வந்த 18வயதுடைய கிஷோர் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ALSO READ  தமிழகத்தில் உள்ள 3000 அகதிகளை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை

தற்கொலை செய்துகொள்ளும் அன்று கிஷோர் உணவு சாப்பிடுவதற்கு செல்லவில்லை.இதனை அறிந்த கிஷோரின் நண்பர்கள் தொலைபேசி மூலம் கிஷோரை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அழைப்பை எடுக்காததால் விடுதிக்கு வந்து பார்த்துள்ளனர். நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் விடுதிக் காப்பாளரிடம் தெரிவித்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது கிஷோர் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அனைவரும் திகைத்துள்ளனர்.

பின்பு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கிஷோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.கிஷோரின் தற்கொலைக்கு ராகிங் காரணமாக இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ  தமிழகத்தில் ஆட்சியமைக்க மு.க ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு ! 

கல்லூரி பயிலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.எனவே இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுவதே ஒரு நல்ல தீர்வாக அமையும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!

Admin

சமூக ஆர்வலர்  டிராஃபிக் ராமசாமி  காலமானார்!

News Editor

இறுதிக்கட்ட வேளையில் சென்னையின் பறக்கும் பாலங்கள்!

News Editor