உலகம்

சீன அதிபரை விமர்சித்த கோடீஸ்வரர் மாயம்…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெய்ஜிங்:-

சீனாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ரென் ஸிகியாங்க் (Ren Zhiqiang). இவர் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக உள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு வரை கம்யூனிஸ்ட் கட்சியின் முனிசிபல் கமிட்டி உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக சீன அதிபர் ஜி ஜிங்பிங் கையாண்ட விதம் குறித்தும்; அவரை ஒரு அதிகார பசியுள்ள கோமாளி (Clown) என்று விமர்சித்திருந்தார்.

ALSO READ  என்னே ஆச்சரியம்- 1,000 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை உடையாமல் கண்டெடுப்பு…!

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோடிஸ்வரன் ரென் மாயமாகியுள்ளார். அவர் எங்கு இருக்கிறார் என்று இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. கடந்த 12ம் தேதிக்கு பிறகு யாரும் அவரைப் பார்க்கவில்லை.

சீனாவை சேர்ந்த சவுத் சைனா மார்னிங் போஸ்ட் (South China Morning Post) என்ற செய்தி நிறுவனம், அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தது. ஆனால் அவரது மொபைல் எண் அனைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ALSO READ  ஊரடங்கு நீட்டிப்பு; ஜூன் முதல் இலவச மளிகை வழங்க உத்தரவு !

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் நீண்ட கால உறுப்பினராக இருந்து வருகிறார் ரென். இவர் தனது தைரியமான கருத்துக்களுகாக பிரபலமானவர். கட்சியில் அவரை பீரங்கி (The Cannon) என்று அழைப்பார்கள்.

இவர் ஜி ஜிங்பிங்-ஐ விமர்சிப்பது முதன்முறை இல்லை. ஏற்கனவே 2016ம் ஆண்டு அவரை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். அதோடு தனது கருத்துக்களை அழிக்கக் கோரி தான் நிர்ப்பந்திக்கப்பட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெளியுறவு அமைச்சக அலுவகலத்தில் பணியாற்றி வரும் பூனை ஓய்வு பெற்றதாக அறிவிப்பு.. 

naveen santhakumar

இறுதிச்சடங்குகள் நடைபெறும் கடைசி நேரத்தில் பிணப்பைக்குள் இருந்த பெண்மணி அலறியதால் பரபரப்பு….

naveen santhakumar

சிங்கத்திடம் சிக்கிய சிறுவன்: சாதுரியமாக மீட்ட தந்தை

Admin