உலகம்

திமிங்கலத்தின் வாந்தி மூலம் கோடீஸ்வரரான குப்பை பொறுக்குபவர்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சிலர் செய்யும் வேலையை மிகவும் பிடித்து செய்வார்கள். சிலர் வேறு வழியின்றி தனக்கு பிடிக்காத வேலையை அன்றாட உணவிற்காக செய்து வருவார்கள். அப்படி குப்பை பொறுக்கும் தொழிலை செய்து வரும் தாய்லாந்தை சேர்ந்த சுராசெட் சஞ்சு என்பவருக்கு கடலோரம் கிடைத்த பொருள் அவரை கோடீஸ்வரராக்கி உள்ளது.

ஆம், திமிங்கலத்தின் வாந்தி தான் அது. திமிங்கலத்தின் வாந்திக்கு இத்தனை விலை உள்ளதா என்று கேட்கிறீர்களா ? , ஒரு வகையான திமிங்கலத்தின் வயிற்றிலிருந்து உருவாகும் ஆம்பர் கிரீஸ் எனப்படும் வாந்திக்கு நறுமண தன்மை உண்டு. இது நீடித்து இருக்க கூடிய நறுமணம் என்பதனால் பெரிய நிறுவனங்கள் இந்த ஆம்பர்கிரீசை பயன்படுத்தி வாசனைப் பொருட்களைத் தயாரிக்கின்றனர்.

ஆம்பர் கிரீசின் ஒரு கிலோவின் விலை 13 லட்சம் ஆகும். சுரா செட் சஞ்சு விற்கு 16 கிலோ எடையுள்ள ஆம்பர் கிரீஸ் கிடைத்துள்ளது. இதன் மூலம் சாதாரண குப்பை பொறுக்கும் பவராக இருந்த சஞ்சு தற்போது கோடீஸ்வரராகி சர்வதேச ஊடகங்களில் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

ALSO READ  லண்டனில் மேற்படிப்புக்காக சென்ற.. சென்னையை சேர்ந்த இளம்பெண்ணை.. காதல் வலையில் வீழ்த்தி..வங்கதேசத்தில் விற்றனர்:

ஆனால் திமிங்கலத்தின் வாந்திக்கு இத்தனை மதிப்பு இருக்கிறது என்பது சாமானிய ஒருவருக்கு தெரியாது என்பதால் சில நேரங்களில் ஆம்பர் கிரீஸ் குப்பையோடு குப்பையாக வெளியேற்றப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிபர் ஜெயிர் போல்சொனரோ மருத்துவமனையில் அனுமதி :

Shobika

பள்ளி மாணவர்களுக்காக ஆசிரியராக மாறிய ஜஸ்டின் ட்ரூடோ…

naveen santhakumar

கொரோனா மரணங்கள்.. பிரம்மாண்ட குழிகள்… தயாராகும் லண்டன் கல்லறைகள்….

naveen santhakumar