உலகம்

கொரோனா மரணங்கள்.. பிரம்மாண்ட குழிகள்… தயாராகும் லண்டன் கல்லறைகள்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

 சிஸில்ஹர்ஸ்ட்:-

லண்டனில் கொரோனாவால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களை அடக்கம் செய்வதற்காக தென்-கிழக்கு லண்டனில் சிஸில்ஹர்ஸ்ட் (Chislehurst) அருகே உள்ள கெம்நல் பார்க் கல்லறைத் தோட்டத்தில் (Kemnal Park Cementery) நீண்ட குழிகள் தோண்டப்பட்டு உள்ளது.

இஸ்லாமியர்களிடையே தகனம் செய்யும் பழக்கம் இல்லை. அதேபோல இறந்தவர்களின் வழக்கப்படி உடலை 24 மணி நேரத்திற்குள் புதைத்து விட வேண்டும். தற்பொழுது லண்டனில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் காரணத்தால் இஸ்லாமியர்கள் அடக்கம் செய்வதற்காக இரண்டு வாரங்கள் வரை காத்திருக்கும் நிலை நிலவுகிறது. 

ALSO READ  என் குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா தொற்று; வேண்டுகோள் விடுத்த நடிகை !

தற்போது வரை  50க்கும் மேற்பட்டோர் அடக்கம் செய்வதற்காக காத்திருக்கிறார்கள் என்று அந்த கல்லறை தோட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த இஸ்லாமிய இடுகாடு கெம்நல் பார்க் கல்லறைத் தோட்டத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது. இந்த நீண்ட புதைகுழிகள் Saff Graves எனப்படும். இந்த புதைகுழிகள் 10 மீட்டர் நிலைத்திருக்கும் 2 மீட்டர் அகலத்திற்கு வெட்டப்பட்டுள்ளது

இதுகுறித்து கூறிய கெம்நல் பார்க் கல்லறை தோட்டம் மேலாளர்:-

ALSO READ  உலக அமைதி மாநாட்டில் மம்தா பானர்ஜி பங்கேற்க ஒன்றிய அரசு அனுமதி மறுப்பு
Kemnal Park Cementery

கொரோனாவால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டு வரும் காரணத்தால் கல்லறைத் தோட்டத்தை இஸ்லாமியர்கள் இறுதி சடங்கு செய்வதற்கு ஏற்ற வகையில் தயார்படுத்தி உள்ளோம். அதேபோல் அரசாங்கம் கூறியபடி பத்து பேருக்கு மேல் அனுமதிக்கப்படுவதில்லை.

இஸ்மாயில் முஹம்மத் அப்துல் வாஹாப் (13) என்ற சிறுவன் தான் பிரிட்டனில் கொரோனா நோய்க்கு பலியான மிக இளம் வயது நபர் ஆவார். இவர் கடந்த வாரம் இந்த கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விண்வெளியில் ஒரு புதிய சகாப்தம்.. ஏவப்பட்டது ஆர்டெமிஸ்-1!

Shanthi

வேகமாக பரவும் கொரோனா – சீனாவில் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு

naveen santhakumar

பாகிஸ்தானில் சீன தொழிலாளர்கள் சென்ற பேருந்து வெடித்து சிதறல் :

Shobika