அரசியல் இந்தியா

நாட்டின் பொருளாதாரத்தை விட மக்களின் உயிர் தான் எனக்கு முக்கியம்- பிரதமர் மோடி…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா வைரஸ் தொடர்பாக இரண்டாவது முறையாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். இன்று நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் அனைத்து நகரங்களிலும் அனைத்து கிராமங்களிலும் தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 519 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 10 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் முழு ஊரடங்கு (லாக் டவுன்) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று மோடி உரையின் சிறப்பம்சங்கள்:-

இந்த சோஷியல் டிஸ்டன்ஸிங் என்பது பிரதமர் உட்பட நாட்டில் உள்ள அனைவருக்கும் பொருந்தக்கூடியது. இது ஒன்றுதான் இந்த கொடிய வைரஸை எதிர்த்துப் போராட நமக்கு இருக்கும் ஒரே வழி நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக தங்கள் வீடுகளுக்குள் இருப்பது ஒன்றே இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும்.

இந்த நோய் பரவல் சங்கிலியை உடைப்பதற்கு அனைவரும் பாதுகாப்பாக வீட்டுக்குள் இருந்து சோசியல் டிஸ்டன்ஸிங்கை கடைப்பிடிப்பது ஒன்றே வழி.

நமது பொறுப்பற்ற தன்மை தொடருமானால் நமது நாடு மிகப்பெரிய விலை தர நேரிடும் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அதிகமானதாக இருக்கும். குடிமக்கள் அனைவரும் அரசின் அறிவுரையைக் கேட்டு கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

ALSO READ  குறைந்தளவு பார்வையாளர்களுடன்  51 வது சர்வதேச திரைப்படவிழா நடத்தப்படும் :  பிரகாஷ் ஜவடேகர்

முழு ஊரடங்கு என்பது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக எடுக்கப்படுகிறது. இதனால் இந்தியாவின் பொருளாதரம் மிக மோசமாக பாதிப்பு அடையலாம். ஆனால் பொருளாதாரத்தை விட மக்களின் உயிர்தான் முக்கியம்.

21 நாட்கள் தனிமைப்படுத்தா விட்டால் 21 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விடுவோம்.

உங்களுக்கு நீங்களே ஒரு லட்சுமண ரேகையை போட்டுக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் தாக்கினால் ஆரம்பத்தில் அறிகுறிகள் எதுவும் தெரியாது, பாதிக்கப்பட்ட நபர் ஆரம்பத்தில் சாதாரணமாக தான் இருப்பார்கள். ஆனாலும் அவர் மூலமாக நூற்றுக்கணக்கான அவர்களுக்கு பரவும்.

கொரோனா வைரஸ் தாக்கினால் அதை தெரிந்து கொள்ள 14 நாட்கள் ஆகும். ஒருவருக்கு கொரோனா தாக்கினால், அது காட்டுத் தீ போல பரவும்.

ஒருவரை தாக்கும் கொரோனா 67 நாட்களில் ஒரு லட்சம் பேரை தாக்கும். அடுத்த 11 நாட்களில் மேலும் ஒரு லட்சம் பேரை தாக்கும்.

இதன் மூலம், கொரோனா எவ்வளவு வேகமாக பரவும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

ALSO READ  சொப்பன சுந்தரிக்கு கொரோனா தொற்று உறுதி !

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு ரூ.15000 கோடி ஒதுக்கீடு செய்கிறது.

வீட்டில் இருக்கும் நீங்கள் அனைவரும் தங்களுடைய வாழ்வை இக்கட்டில் வைத்துள்ளவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். மேலும், இரவு பகல் பாராது மக்களுக்காக உழைத்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், நோயியல் நிபுணர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், வார்டு பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என இந்த இந்த இக்கட்டான நிலையில் சேவை செய்யும் அனைவரையும் சற்று நினைத்துப்பாருங்கள்.

இன்று நாம் இருக்கும் கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் இருப்பதற்கு இன்றைய தினம் நாம் எடுக்கும் இந்த முயற்சி வரும் நாட்களில் இந்த பேரழிவை தடுப்பதற்கு உதவும்.

இந்தியாவால் மட்டும் இந்த பேரழிவை எதிர்கொள்ள முடியாது. ஆனால் இந்த பேரிடரை குறைக்கும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு.

அமைதியும் பொறுமையும் காக்க வேண்டிய தருணம் இது. ஊரடங்கு நீடிக்கும் வரை அரசோடு இணைந்திருங்கள் என கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன்.

சேவைத் துறையில் பணியாற்றுவோரை கையெடுத்து வணங்குங்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Veikkaus Bietet Verlustlimit An Spielautomaten A

Shobika

Vulcan Vegas bestes сasino mit bonus codes für bestehende kunden, attraktiven willkommensbonus, promo codes für freispiel

Shobika

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியின் பரிசோதனை வெற்றிகரமாக முடிந்தது :

naveen santhakumar