உலகம்

கண்ணீர் விட்டு அழுதாரா இத்தாலி பிரதமர் உண்மை என்ன??

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இத்தாலியில் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால் அந்நாட்டு பிரதமர் கண்ணீர் விட்டு அழுததாக தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. இந்த பதிவு உண்மை நிலவரம் என்ன?

கொரோனா பரவ ஆரம்பித்த சீனாவை விட அதிகமாக கொரோனா வைரஸால் மிக மோசமாக பாதிப்படைந்துள்ள நாடாக இத்தாலி திகழ்கிறது. இதுவரை 63,000 பேருக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் 6,000-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் கொரோனாவினால் இத்தாலியில் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் மரணமடைந்து வருவதால், நாடு இருக்கும் நிலையை எண்ணி இத்தாலி பிரதமர் கதறி அழுததாகவும், மேலும் பல தகவல்களை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் உலா வருகிறது

ALSO READ  ஈராக்கில் பயங்கரம்.....தற்கொலைப்படை தாக்குதல்.....32 பேர் பலி...பலர் படுகாயம்......

 இதன் உண்மை நிலவரம் என்ன?

உண்மையில் இவர் இத்தாலி பிரதமரே கிடையாது. ஆம், இவர் பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சாரோ (Jair Bolsaro).

இடது இத்தாலி பிரதமர் காண்டே வலது பிரேசில் அதிபர் ஜெய்ர்.

இவர் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ‘2018-ம் ஆண்டு நடைபெற்ற கத்திகுத்து சம்பவம் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசியனார்’. அந்த புகைப்படத்தை தற்போது கொரோனாவுடன் இணைத்து தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது.

ALSO READ  கொரோனா ஊரடங்கு காலத்தில் சத்தமில்லாமல் அழியும் உலகத்தின் நுரையீரல்....

இத்தாலியின் பிரதமர் இவர் தான் பெயர் கியூசிபே காண்டே (Giuseppe Conte) 

காண்டே இதுவரை கொரோனா தொடர்பான எந்த பேட்டியிலும் அழுகவில்லை.

கொரோனா வைரஸ் பரவும் வேகத்தை விட வேகமாக அது குறித்த வதந்திகள் பரவிவருகிறது. எனவே எதையும் ஆய்ந்து, ஆராய்ந்து அனுகுங்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஹைதி அதிபர் கொலை வழக்கு…..அமெரிக்க டாக்டர் கைது….

Shobika

இத்தாலி மற்றும் சீனாவை தாண்டியது அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை…

naveen santhakumar

கொரோனாவாஅதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்…. கொண்டாட்டத்தில் களைகட்டும் ஐரோப்பிய நாடு…

naveen santhakumar