மருத்துவம்

சீதாப்பழம் இதய நோய்களை தடுக்கும்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீதாப் பழத்திலுள்ள பல சத்துக்கள் இதயத்தைப் பலப்படுத்தி, சீராக இயங்கச் செய்யும். இதயம் சம்பந்தமான நோய்கள் வராது காக்கும் என மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆரம்ப நிலை காசநோயைக் குணப்படுத்தும் சக்தி சீதாப்பழத்திற்கு உண்டு. மத்திமநிலை காச நோய் உள்ளவர்களுக்கு நோய் கட்டுக்குள் இருக்கச் செய்யும்.

சீதாப்பழச்சாறு குடித்தால், கோடையில் ஏற்படும் கொடும் தாகம் தணிந்து உடல் குளிர்ச்சி பெறும். தொடர் வாந்தி, குமட்டல் ஏற்பட்டால் ஒரு சீதாப்பழத்தை மென்று தின்றால் உடனே வாந்தி, குமட்டல் நிற்கும். உஷ்ணத்தால் ஏற்படும் மாந்தத்தைக் குணப்படுத்தும் தன்மை இப்பழத்திற்கு உண்டு. சீதாப்பழத்துடன், சிறிது இஞ்சிச்சாறு, கருப்பட்டி சேர்த்து தின்றால், பித்தம் மொத்தமாக விலகும்.

அறுவை சிகிச்சைக்குப் பின் சீதாப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் உள்ளுறுப்புகளில் உள்ள இரணங்கள் விரைவில் ஆறும். மலச்சிக்கல் உள்ளவர்கள் சீதாப்பழத்தைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் மாய்ந்து விடும். சிறிது வெந்தயத்தை ஊற வைத்து எடுத்து சீதாப்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர குடற்புண் விரைவில் குணமாகும். உடம்பு ஊளைச்சதை உள்ளவர்கள் தொடர்ந்து சீதாப்பழம் சாப்பிட்டு வர ஊளைச்சதை கணிசமாக குறையும்.

ALSO READ  சிறுநீரக கற்களின் வகைகளும்- அதற்கான இயற்கை மருத்துவ முறைகளும்…!!

சீதாப்பழம் இரத்த விருத்தி செய்யும். சோகை நோயைக் குணப்படுத்தும். இப்பழத்தில் குளுக்கோஸ் கணிசமாக உள்ளதால் உடல் சோர்வை அகற்றி சுறுசுறுப்பை ஏற்படுத்தும். சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்கள் சீதாப்பழச் சாறுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து பருகினால் சிறுநீர் தாராளமாகப் பிரியும். நீர்க்கடுப்பும் நீங்கும். நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை சீதாப்பழத்திற்கு உண்டு என ஜெர்மன் நாட்டு மருத்துவ ஆராய்ச்சியிலிருந்து தெரிய வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்பட்ட பெண்கள் : டாக்டர் செய்த காரியம்

Admin

6 ஆயிரம் ரூபாயில் வெண்டிலேட்டர்..ஒடிசா தொழிலதிபர் தயாரிப்பு…..

naveen santhakumar

இந்த காய்கறிகளை சாப்பிட்டால் மாரடைப்பு வராது:

naveen santhakumar