இந்தியா

‘நான்தான் நிஷா ஜிண்டால்’… பெண் பெயரில் போலி கணக்கு… பதினோரு வருடங்களாக அரியர் எழுதிவரும் இன்ஜினியரிங் பட்டதாரியின் தில்லாலங்கடி….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ராய்ப்பூர்:-

 ஃபேஸ்புக்கில் போலிக் கணக்குகளுக்கு பஞ்சமில்லை நாளுக்கு நாள் இந்த போலி கணக்குகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. இந்த போலி கணக்குகள் மூலமாக பல்வேறு நபர்கள் தவறான செய்திகளை பரப்பி பெரும் கலவரங்களுக்கு வித்திடுகிறார்கள். இவ்வாறு இவற்றில் பரப்பப்படும் செய்திகளை மக்கள் சற்றும் யோசிக்காமல் அப்படியே உண்மை நம்பி விடுகிறார்கள். அப்படி ஒரு பேக் ஐடி குறித்து செய்திதான் இது.

ராய்ப்பூர் போலீசார் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டு வந்தன என்ற ஃபேஸ்புக் ஐடியை போலீசார் ஆராய்ந்து வந்தனர். அப்பொழுதுதான் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. நிஷா ஜிண்டால் என்ற பெயரில் இயங்கி வந்த அந்த ஐடியை இயக்கி வந்தவர் ஒரு ஆண் என்பதும் அவரது பெயர் ரவி புஜார் என்பதும் தெரியவந்தது.

ALSO READ  மாறுவேடத்தில் மீண்டும் களமிறங்கியுள்ள பப்ஜி …!

உடனடியாக ரவி புஜாரை கைது செய்த போலீசார் சிறப்பாக கவனித்தனர். அவர் ஒரு இன்ஜினியரிங் பட்டதாரி என்பது தெரியவந்தது. இதில் கொடுமை என்னவென்றால் அந்த போலி கணக்கை கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கிறார்கள்.

இதையடுத்து போலீசார் அவரது உண்மையான புகைப்படத்தை பதிவு செய்தனர், அத்தோடு தாம் இப்பொழுது போலீசாரின் கஸ்டடியில் இருப்பதாகவும் அதில் பதிவிட கூறினார்கள். இதையடுத்து போலீசார் கூறியவாறு அந்த தன்னுடைய புகைப்படத்தையும் தான் தற்போது போலீசாரின் கஸ்டடியில் இருப்பதாகவும் ரவி பதிவிட்டார்.

ALSO READ  கொரோனாவால் உயிருக்குப் போராடும் தாய்.... என் அம்மா பிழைக்க வேண்டும்.. கண்ணீர் விட்டுக் கதறிய சிறுமி...

இதில் மற்றொரு வேடிக்கை என்னவென்றால் ரவி இதுவரை இன்ஜினியரிங் படிப்பை முடிக்கவில்லை. கடந்த 11 ஆண்டுகளாக அரியர் எழுதி வருகிறார் என்பது மேலும் கூடுதல் தகவல். இதையடுத்து இவரைக் கைது செய்து சமூக அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக இவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதனிடையே பிரியங்கா சுக்லா என்ற  IAS அதிகாரி தம்முடைய டுவிட்டர் பதிவில்:-

கடைசியில் நிஷா ஜிண்டால் என்ற பெயரில் இயங்கிய ஃபேஸ்புக் பக்கத்தின் உண்மையான நிஷா இவர் தானா?? 11 ஆண்டுகளாக இன்ஜினியரிங் படிப்பை முடிக்காத இந்த ரவிக்கு ஃபேஸ்புக் பக்கத்தில் பத்தாயிரம்  ஃபாலோவர்கள் உள்ளார்களா!! என்று ஹிந்தியில் பதிவிட்டிருந்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தினம் 45 ஆயிரம் பேருக்கு உணவு..மருத்துவர்களுக்கு 6 மாடி ஹோட்டல்.. நிஜத்தில் ஹீரோவான வில்லன்..… 

naveen santhakumar

3வது அலையா??- உ.பி.ல் மர்ம காய்ச்சல் 40க்கும் மேற்பட்டோர்  உயிரிழப்பு…!

naveen santhakumar

இந்த அப்பளம் கொரோனாவை விரட்டும் மத்திய அமைச்சர் அறிமுகப்படுத்திய பாபி ஜி அப்பளம்… 

naveen santhakumar