உலகம்

கொரோனாவால் உயிருக்குப் போராடும் தாய்…. என் அம்மா பிழைக்க வேண்டும்.. கண்ணீர் விட்டுக் கதறிய சிறுமி…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பொதுவாக சமூகவலைத்தளங்களில் போலி செய்திகளுக்கு பஞ்சமில்லை. தற்போது கொரோனா பரவியுள்ள இந்த காலகட்டத்தில் போலி செய்திகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. பல செய்தி நிறுவனங்களுக்கு எது உண்மை?? எது போலி?? என்பதை தெரியப்படுத்தே முக்கிய வேலையாக மாறிவிட்டது.

முன்னர், இத்தாலியின் பிரதமர் மக்களை காப்பாற்ற முடியவில்லை என்று கண்ணீர் விட்டதாக ஒரு செய்தி உலா வந்தது. 

உண்மையில் அந்த செய்தியில் இருந்தவர் இத்தாலியின் பிரதமரை கிடையாது. அவர் பிரேசில் நாட்டின் அதிபர் ஜேர் பொல்சனாரோ. இத்தாலியின் பிரதமர் க்யூஸப் கான்ட்டே.

இந்நிலையில் அதே போன்ற ஒரு பொய் செய்தி தான் தற்போது சமூக வலைதளங்களில் உலா வருகிறது. சுபோத் கிறிஸ்டியன் (Suboth Christian) என்பவர் தனது ஃபேஸ்புக் கணக்கில் கோரோனா தொற்றால் உயிருக்குப் போராடும் தாய்- கண்ணீர் வடிக்கும் மகள் என இரண்டு புகைப்படங்களை ஒன்றாக சேர்த்து பதிவிட்டு வைரலாகி வந்த நிலையில் தற்போது அதன் உண்மைத்தன்மை தெறி தெரியவந்துள்ளது.

அந்த புகைப்படத்தில் அந்த சிறுமி கூறுவதாக அமைந்தவை, எனது தாயை காப்பாற்ற உதவுங்கள் நான் நான் அவர்களை இழக்க விரும்பவில்லை. நான் உங்களிடம் பணம் கேட்கவில்லை, ஆனால் பிரார்த்தனை செய்யுங்கள் இந்தப்பதிவை அதிக அளவு பகிருங்கள் என்று அந்த பதிவில் இருந்தது. இந்தப்பதிவு கிட்டத்தட்ட 73 ஆயிரம் தடவைக்கு மேல் பகிரப்பட்டது.

ALSO READ  4 வருடத்திற்கு பின் இறந்த மகளை சந்தித்த தாய்…

ஆனால் உண்மையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக கூறப்படும் அந்தப் பெண்ணிற்கும் அந்த சிறுமிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.  

அந்தப் பெண்மணியின் பெயர் ஜென்னி போன் (Jenny Bone) கடந்த 2015 ஆம் ஆண்டு அரிய வகை நோய் குறைபாட்டால் பக்கவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பெண் கோமா நிலைக்கு சென்றார். இதையடுத்து மருத்துவர்கள் அவர் இனி பிழைப்பதற்கு வாய்ப்பில்லை எனவே இவருக்கு செயற்கை சுவாச  அளிக்கப்பட்டு வருவதை நிறுத்திவிடலாமா?? என்று அவரது கணவரிடம் அனுமதி கேட்டனர். ஆனால் அந்த பெண்ணின் கணவர் அனுமதி அளிக்க மறுத்து விட்டார். அதன்பின்னர் அந்தப் பெண் முற்றிலுமாக குணம் அடைந்தார். இது தொடர்பான செய்திகள் Daily Mail உள்ளிட்ட பத்திரிகைகளில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ  உலகம் முழுவதும் 10 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு !

கண்களில் கண்ணீரோடு நிற்கும் அந்த சிறுமியின் புகைப்படம் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி கேட் சிம்சன் (Cat Simpson) என்பவரால் எடுக்கப்பட்டது என்று ஃபைன் ஆர்ட் அமெரிக்கா (fineartamerica) என்ற வலைதளம் கூறியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இங்கிலாந்து பகுதியில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய வகை

naveen santhakumar

டெல்லி-லண்டன் பேருந்து வசதி;கட்டணம் எவ்ளோனு கேட்டா??? ஹார்ட் அட்டாக் வந்திடும்!!!!!!

naveen santhakumar

ஊழியர்களின் ஓய்வை ‘ஓசி’யில் கேட்பதா??அமேசானை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்…..

naveen santhakumar