உலகம்

புதிய வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியாவில் கொத்து கொத்தாக செத்து விழும் பறவைகள்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரிஸ்பேன்:- ஆஸ்திரேலியாவில், கடந்த சில வாரங்களாக பிரிஸ்பேன் நகரின் பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான வானவில் கிளிகள் (Lorikeets), வானில் பறந்து கொண்டிருக்கும்போதே, திடீரென கீழே விழுந்து இறக்கின்றன.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் இறந்த போன கிளிகளை ஆராய்ச்சி செய்தலில் பல அதிர்ச்சிகரமான செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

இந்த நோய் Lorikeet Paralysis Syndrome or Clenched-Foot Syndrome என்று அழைக்கப்படுகிறது. இதனால் பறவைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு வானில் பறக்கும் பொழுது அல்லது மரக் கிளைகளில் அமர்ந்து இருக்கும் பொழுதும் கீழே விழுந்து இறக்கின்றன. மேலும் கீழே விழும் பறவைகளால் சித்திரம் காரணமாக அசைய முடியாமல் எறும்புகளுக்கும் பிற விலங்குகளுக்கும் இறையாக நேரிடுகிறது. இதனால் பிற விலங்குகளுக்கும் இந்த நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ALSO READ  பிரதமர் மோடிக்காக சமோசா மற்றும் மாங்காய் சட்னி செய்து அசத்திய ஆஸ்திரேலிய பிரதமர்… 

இது குறித்து ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிபித் பல்கலைக்கழகத்தின் (Griffith University) ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பேராசிரியர் டேரில் ஜோன்ஸ் (Darrly Jones) கூறுகையில்:-

இதுவரை இறந்த அனைத்தும் கிளிகளுக்கும் புதுவிதமான வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வைரஸ் பாதிக்கப்பட்ட கிளிகள், பிற கிளிகளுடன் சண்டையிடுவதாலும், கடிப்பதாலும் மற்ற கிளிகளுக்கு இந்த வைரஸ் பரவுகிறது. மேலும் கிளிகளுக்கிடையே பரவும் இந்த புது வைரஸ் கொரோனா வைரஸ் போன்றதே ஆகும் எனவும், இதுவும் கொரோனா போன்று கிளிகளின் உடலில் ஒவ்வொரு பாகமாக பரவி, இறுதியில் நுரையீரலுக்குச் சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது என அதிர்ச்சிகரமான செய்தியை கூறினார்.

இதையடுத்து வைரஸ் பாதித்த கிளிகளால் மரக்கிளைகளில் அமர முடிவதில்லை எனவும், எனவே தான் அவை வானில் பறக்கும்போதே மூச்சுத் திணறல் ஏற்பட்டு, கீழே விழுந்து இறந்து விடுகின்றன எனவும் கூறினார். மேலும் இந்த புதுவிதமான வைரஸ் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவும் சூழல் உள்ளதா எனவும் ஆராய்ந்து வருவதாககும் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  அமேசான் நிறுவனர் உடன் விண்வெளி செல்லும் 5-வது இந்தியர் சஞ்சால் கவான்டே..!

மேலும் இதுபோன்று கிளிகள் இறக்கும் சம்பவம் பிரிஸ்பேன் நகரில் மட்டுமல்லாது மெல்போர்ன், சிட்னி, ராக்ஹாம்ப்டன் ஆகிய நகரங்களிலும் அதிக அளவில் கிளிகள் கொத்துக் கொத்தாக செத்து மடிகிறது.

கொரோனா வைரஸை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் உலகம் முழுவதும் விழிபிதுங்கி நிற்கும் இக்கட்டான இந்த காலகட்டத்தில் மேலும் புதுவித வைரஸ் பறவைகளிடம் பரவி வருவது மேலும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவிற்கு ஆதரவாக பேசிய காரணத்தால் ஆஸ்திரேலியா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சீனா எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஈரானில் பரபரப்பு: மிகப்பெரிய போர்க்கப்பல் தீப்பிடித்து, கடலில் மூழ்கியது…!

naveen santhakumar

வாலிபரின் மூளையில் இருந்த புழுவை…. ஐந்து வருடங்கள் கழித்து….. வெற்றிகரமாக வெளியில் எடுத்த மருத்துவர்கள்…..

naveen santhakumar

வன்கொடுமைக்கு உள்ளான பெண்களுக்கு அபராதம் விதித்த போலீசார்.. 

naveen santhakumar