விளையாட்டு

iPL-ல் ரூ. 2.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பானிபூரி வியாபாரி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பானிபூரி விற்ற வீரர் ஒருவரை ஐபிஎல் போட்டிகளில் விளையாட ராஜஸ்தான் அணி ஏலம் எடுத்துள்ளது.கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்ட அனைவருக்கும் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்ற நோக்கத்தில் தங்களது திறமைகளை வெளிக்காட்ட பல வகையான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.

அவற்றில் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர்கள் மிக முக்கியமானவை. கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற 2020ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி ஏலத்தில் முதல்நாளில் 62 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். அதில் ராஜஸ்தான் அணியில் யஷஸ்வி ஜெய்வால் ரூபாய் 2.4 கோடிக்கு அந்த அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். இவர் தற்போது 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் தனது மகன் ஐபிஎல் போட்டிக்கு தேர்வானது அவனது கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என அவரது தந்தை பெருமிதம் அடைந்துள்ளார். வறுமை காரணமாக 11 வயதில் மும்பை வந்த யஷஸ்வி ஜெய்வால் அங்குள்ள பானிபூரி கடைகளில் வேலை பார்த்துக் கொண்டே வீதிகளில் கிரிக்கெட் ஆடி வந்துள்ளார்.

ALSO READ  டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: காலிறுதியில் சதிஷ் குமார்- இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்?

ஒருநாள் அவரது பேட்டிங் திறமையை பார்த்த பயிற்சியாளர் ஜூவாலா சிங்க் அவருக்கு பயிற்சிகள் கொடுத்து 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் இடம் பெற செய்தார். விஜய் ஹசாரே தொடரில் யஷஸ்வி 200 ரன்கள் அடித்து, 16 வயதில் இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதனால் அவர் ஐபிஎல் போட்டிகளிலும் தனது முத்திரையைப் பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இலங்கை சுற்றுப் பயணத்தில் ராகுல் டிராவிட்; உற்சாகத்தில் ரசிகர்கள் !

News Editor

இந்திய பேட்மிட்டன் வீரக்கனைக்கு கொரோனா தொற்று..!

News Editor

2வது நாளில் 165 ரன்களில் சுருண்ட இந்தியா … திணறும் நியூசிலாந்து

Admin