உலகம் விளையாட்டு

பாகிஸ்தான் வீரர் ஷாகித் அஃப்ரிடி கூறிய கருத்திற்கு எதிராக கொதித்த கம்பீர், யுவராஜ் மற்றும் ஹர்பஜன்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடெல்லி:-

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிக்குச் சமீபத்தில் சென்ற ஷாகித் அப்ரிடி உலகமே கொரோனா எனும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது, இதை விட மோசமானது மோடியின் மனமும் இதயமும். காஷ்மீரில் 7 லட்சம் ராணுவத்தினரை குவித்துள்ளார் என கூறினார்

இதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும் எம்.பியுமான காம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்

ALSO READ  கலவர பூமியான சிறை.... அதிபரின் அதிரடி முடிவு....

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள காம்பீர், “பாகிஸ்தானின் 7 லட்சம் ஃபோர்ஸுக்கு 20 கோடி மக்கள் ஆதரவாக இருப்பதாக சொல்கிறார் 16 வயதான ஷாகித் அஃப்ரிடி. இருந்தும் 70 ஆண்டுகளாக காஷ்மீருக்காக கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

அஃப்ரிடி, இம்ரான் கான் மற்றும் பஜ்வா போன்ற காமெடியன்கள் பாகிஸ்தான் மக்களை முட்டாளாக்குவதற்காக இந்தியா மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக விஷத்தை உமிழ்வார்கள். ஆனால், பாகிஸ்தானுக்கு காஷ்மீர் கிடைக்கப்போவதில்லை’’ என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார். 

ALSO READ  "ஹர்பஜன் சிங்" நடிக்கும் படத்தின் டீசர் வெளியீடு !

இதேபோல டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள யுவராஜ் சிங்:-

இது உண்மையாகவே அதிருப்தியளிக்கும் சம்பவம். அஃப்ரிடி அப்படி பேசியிருக்கூடாது. இந்தியனாகவும், இந்திய அணிக்காக ஆடியிருக்கிறேன் என்ற வகையிலும், பிரதமர் மோடியை பற்றி அஃப்ரிடி பேசியதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். இனிமேல் இப்படி நடக்கக்கூடாது. ஜெய்ஹிந்த் என யுவராஜ் சிங் பதிவிட்டுள்ளார்.

இந்தியா குறித்தும் நமது பிரதமர் குறித்தும் அவதூறு கருத்துகளைத் தெரிவித்திருக்கும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடியுடன் இனிமேல் எந்தத் தொடர்பும் கிடையாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்திருக்கிறார்.

இது போல் ஷிகர் தவானும் தனது கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குழந்தைகளுக்கு மரபணு மாற்றம்-மருத்துவருக்கு 3 ஆண்டுகள் சிறை

Admin

நீங்கள் பெண்ணுக்கு நண்பனா? அல்லது காதலனா?

Admin

கோப்பை யாருக்கு: 3வது டி20யில் இன்று இந்தியா- மே.தீ. மோதல்

Admin