இந்தியா உலகம் லைஃப் ஸ்டைல்

நீங்கள் பெண்ணுக்கு நண்பனா? அல்லது காதலனா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆணும் பெண்ணும் நெருங்கிய நண்பர்களாக இருப்பது வழக்கம்தான் .ஆனால் ஒரு ஆணுக்கு அந்தப் பெண்ணின் மீது காதல் தோன்றியது போலவே அந்தப் பெண்ணுக்கும் இவர் மீது காதல் இருக்கிறதா என்று தெரிந்து கொள்வது எப்படி என பல ஆண்களுக்கு தெரிவதில்லை. உங்களின் குழப்பத்தை நீக்குவதற்கான சில டிப்ஸ் இதோ .

காலையில் நடந்ததில் இருந்து அனைத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொண்டால் நீங்கள் அந்த பெண்ணுக்கு பிடித்தமானவர் என்று அர்த்தம் .அதேபோல் அவருக்குப் பிடித்த ஒரு வேறொரு ஆண் நபரை பற்றி உங்களிடம் பேசினால் , உங்களை ஒரு நல்ல நண்பனாக மட்டும் தான் பார்க்கிறாள். எனவே அந்தப் பெண்ணிடம் வெறும் நண்பனாக மட்டும் பழக்குவது உங்களுக்கு நல்லது.

நீங்கள் அந்தப் பெண்ணுடன் நேரம் செலவிடுவதற்காக எத்தனையோ பிளான் செய்தாலும், அந்த பெண் வர மறுத்தால் உங்களுடன் நேரம் செலவிடுவதற்கு விருப்பம் இல்லை என்று அர்த்தம்.அவளுக்காக நீங்கள் என்ன செய்தாலும் உங்களை பொருட்படுத்த வில்லை என்றால் அந்த பெண்ணிற்கு உங்களின் மீது எந்த ஒரு ஆசையும் இல்லை.

ALSO READ  இன்ஸ்டாகிராமில்பள்ளி மாணவர்களின் அதிர வைக்கும் ஆபாச சாட்... ட்விட்டரை அதிரவைத்த அதன் ஸ்கிரீன்ஷாட்கள்...

நீங்கள் அதிகமாக விரும்பும் பெண்ணே, உங்களுடன் வேறு ஒரு பெண்ணை பேச வைப்பதற்கு அவருடன் வெளியே சென்ற வருவதற்கு உதவினால் உங்களை நிச்சயமாக அந்த பெண் காதலனாக நினைக்கவில்லை. இந்த தருணத்திலேயே நீங்கள் அவருடன் நெருங்கிப் பழகுவதை நிறுத்திக் கொள்வது நல்லது.

வேறு ஒரு ஆண் நண்பனுக்காக உங்களிடம் அடிக்கடி உதவி கேட்கிறார் என்றால், அவருக்கு உங்களை விட அவரின் மீது பாசம் அதிகம் இருக்கிறது என்று அர்த்தம் .இந்த தருணத்தில் அந்தப் பெண் உங்களை விரும்புகிறாரா? இல்ல அந்த நபரை விரும்புகிறாரா? என்பதை நீங்கள் உறுதி செய்து கொண்டு பழக வேண்டும்.அவருடைய பிரச்சனைகளுக்கு நீங்கள் ஆதரவாக இருந்தாலும், உங்களை பொருட்படுத்தவில்லை என்றால், உங்களை பற்றி கவலையில்லை என்றுதான் அர்த்தம். உங்களுடைய பிரச்சினை பற்றி அவர் எப்போது கடைசியாக கேட்டார் என்று நினைத்து பாருங்கள். அதில் உங்களுக்கான விடை கிடைத்துவிடும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி நாளை பதவியேற்பு :

Shobika

ஒரு வாழை பழம் ரூ.500; 2 நாட்களுக்கு ஒருமுறை உணவு- முதல் முறையாக ஒப்புக் கொண்ட கிம் …!

naveen santhakumar

தொடரும் கொரோனா பாதிப்பு; அச்சத்தில் உலக நாடுகள்..!

News Editor