சினிமா

மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜா குடும்பத்தில் அடுத்த அதிர்ச்சி: நடிகர் துருவாவுக்கும், மனைவிக்கும் கொரோனா… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெங்களூரு:-

நடிகர் அர்ஜுனின் உறவினரும், பிரபல கன்னட நடிகரும், நடிகை மேக்னா ராஜின் கணவருமான சிரஞ்சீவி சார்ஜா 39 வயதிலேயே மாரடைப்பு காரணமாக கடந்த மாதம் திடீரென மரணமடைந்தார். அவரது  மறைவு சினிமா துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது.

இந்நிலையில் சிரஞ்சீவி சார்ஜாவின் தம்பியும், நடிகருமான துருவா சார்ஜாவுக்கும் (31), அவரது மனைவி பிரானாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ALSO READ  "தளபதி கெட்டப்பில் தோன்றும் ஹரிஷ் கல்யாண்", இணையத்தில் வைரலாகும் ஸ்டார் பட போஸ்டர்..!

இது பற்றி துருவா சார்ஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

எனக்கும் என் மனைவிக்கும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளது. அதனால் நாங்களே மருத்துவமனையில் சேர முடிவெடுத்தோம். நாங்கள் நலமுடன் திரும்ப வருவோம் என உறுதியுடன் இருக்கிறோம். எங்களுடன் நெருக்கமாக இருந்த அனைவரும் தயவு செய்து கொரோனா டெஸ்ட் செய்து கொள்ளுங்கள். பாதுகாப்புடன் இருங்கள். என்று கூறியுள்ளார்.

ALSO READ  டுவிட்டரில் ட்ரெண்டாகும் #2YrsOfRajiniMakkalMandram

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தான் துருவா சார்ஜாவுக்கு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கர்ப்ப நேரத்தில் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்த அனுஷ்கா ஷர்மா..!வைரலாக புகைப்படம்..!

News Editor

டிடி என்னும் திக் க்ரீன் பட்டர்ஃபிளை

Admin

இணையதயத்தில் ட்ரெண்டாகும் “குருதி ஆட்டம்” திரைப்படத்தின் டீசர் 

News Editor