சினிமா

MoneyHeist சீரிஸ் நிறைவடைவதாக நெட்ஃபிளிக்ஸ் அறிவிப்பு!!… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரபல MoneyHeist சீரிஸ், வரவிருக்கும் 5வது சீசனுடன் நிறைவடைவதாக நெட்ஃபிளிக்ஸ் (Netflix) நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரபல ஸ்பானிஷ் வெப் சீரிஸான மணி ஹெய்ஸ்ட் (La Casa De Papel) கதை சொல்லும் பாணி, பெண்ணிய சிந்தனை,  டார்க் காமெடி, அற்புதமான திரைக்கதை போன்ற காரணங்களுக்காக உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற தொடராகும். 

இதில் வரும் ப்ரொஃபஸர் என்ற கதாபாத்திரம் பெருவாரியான ரசிகர்களை கொண்டது. இந்த வெப்சீரிஸ் இந்தியாவிலும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளது குறிப்பாக ப்ரொஃபசர் கதாபாத்திரத்திற்கு.

ALSO READ  நடிகர் செல்லத்துரை மறைவுக்கு  ஹிப் ஹாப் ஆதி இரங்கல் !

இந்நிலையில் இந்த மணி ஹெய்ஸ்ட் வெப்சீரிஸ் வரவிருக்கும் ஐந்தாவது சீசனுடன் நிறைவடைய உள்ளதாக நெட்வொர்க்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஐந்தாவது சீசனில் மொத்தம் 10 எபிசோடுகளோடு இந்த மணி ஹெய்ஸ்ட் தொடர் நிறைவடையவுள்ளது.

ஆங்கிலமற்ற பிற மொழி வெப் சீரிஸ் ஒன்று உலக அளவில் பிரபலம் அடைந்தவற்றில் முக்கியமானது மணி ஹெய்ஸ்ட். கடந்த ஏப்ரல் மூன்றாம் தேதி இதன் நான்காவது பாகம் ரிலீஸானது. ரிலீசான முதல் மாதத்திலேயே 65 மில்லியன் மக்களால் பார்க்கப்பட்டது குறிப்பிடதக்கது.

ALSO READ  கலாஷேத்ரா விவகாரம் - 4 பேராசிரியர்கள் டிஸ்மிஸ்..


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெயரை மாற்றினார் நடிகை சமந்தா :

Shobika

ஜி.வி.பிரகாஷ் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் !

News Editor

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  நடிகர் விவேக் உயிரிழந்தார் !

News Editor