இந்தியா

மத்திய சென்சார் வாரியத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் கடிதம்! …

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

ராணுவத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படம் மற்றும் வெப்சீரிஸ் ஆகியவற்றை வெளியிடுவதற்கு முன் சம்பந்தப்பட்ட தயாரிப்புக் குழு ராணுவ அமைச்சகத்திடம் தடையில்லா சான்றிதழை பெற வேண்டும். ராணுவத்தின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படாததை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு (CBFC) பாதுகாப்புத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

XXX uncensored (season 2) என்னும் இந்திய வெப் சீரிஸில் இந்திய ராணுவ வீரரையும், அவரது சீருடையையும் அவமதி்க்கும் விதத்திலான காட்சிகள் இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, இத்தகைய விண்ணப்பம் தணிக்கை வாரியத்திடம் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  மஹாராஷ்ட்ரா கிராம மக்களுக்கு உதவி வரும் நடிகர் சல்மான் கான்...

ராணுவத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்கள், வெப் சீரியல்களில் இந்திய ராணுவத்தை அவமதிப்பது போன்ற காட்சிகள் இடம்பெறுவதை தவிர்க்கவும், ராணுவம் குறித்த தவறான செய்திகளை வெளியிடுவதைத் தடுக்கவும், ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் மனதைக் காயப்படுத்தாமல் தவிர்க்கவே இதை வலியுறுத்துவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆலப்புழாவில் வைரலாகும் அதிசய கோழி!

Shanthi

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த 2 பயணிகளுக்கு கொரோனா- சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா… 

naveen santhakumar

விபத்தில் சிக்கியவருக்கு தைரியமாக உதவிடலாம் : பரிசும் உண்டு

News Editor