உலகம்

அடுத்ததாக நியூசிலாந்து இடமும் வம்பிழுக்கும் சீனா.. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிஜிங்:-

நியூசிலாந்துடனான குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக ரத்து  செய்வதாக சீனா அறிவித்துள்ளது.

ஹாங்காங்கில் சீன அறிமுகப்படுத்தியுள்ள புதிய சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹாங்காங்குடன் செய்த குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தத்தை கடந்தவாரம் நியூசிலாந்து தற்காலிகமாக ரத்து செய்தது.

மேலும் இதுகுறித்து நியூஸிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் (Winston Peters) கூறுகையில்:-

ஹாங்காங்கில் சீன அறிமுகப்படுத்தியுள்ள புதிய பாதுகாப்பு சட்டம் முற்றிலும் அநீதியான ஒன்று. எங்களுக்கு ஹாங்காங்கில் இனிமேலும் சுதந்திரம் தொடரும் என்பதில் நம்பிக்கை இல்லை. இதையடுத்து இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றார்.

இந்நிலையில் இதற்கு பதிலடியாக நியூசிலாந்துடன் சீனா செய்துள்ள குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக சீனா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் (Wang Wenbin):-

ALSO READ  இது kung fu அரசியல்- அரசியலில் குதிக்க விருப்பம் தெரிவித்துள்ள ஜாக்கி சான்…!

நியூசிலாந்துடனான ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இருந்த போதிலும், அந்த ஒப்பந்தம் சீனா-நியூசிலாந்து இடையிலானது அல்ல, ஹாங்காங்- நியூசிலாந்து இடையிலானது என நியூசிலாந்து விளக்கமளித்துள்ளது.  

ஹாங்காங் தொடர்பான சீனாவின் சட்டத்துக்கு  நியூசிலாந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஹாங்காங் உடன் செய்துள்ள இந்த கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை நியூசிலாந்து மட்டுமல்ல அது கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் புதிய பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மேற்கோள்காட்டி ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்தின் காலனிய பகுதியாக இருந்த ஆங்காங்கு சீனாவுடன் ஒருசில ஒப்பந்தங்களின் படியில் தன்னாட்சி அதிகாரத்தை ஒருங்கிணைக்கப்பட்டது இந்நிலையில் சீனா ஹாங்காங் முழுவதும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக சர்ச்சைக்குரிய பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றி உள்ளது.

இதைத் தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு வரை ஹாங்காங்கைச் சேர்ந்தவர்கள் பலர் இங்கிலாந்தின் பாஸ்போர்ட்டை வைத்துள்ளனர் அவர்களுக்கு அதிரடியாக குடியுரிமை வழங்கப்படும் என்று இங்கிலாந்து அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுநாளே உயிரிழந்த பெண்... சகோதரன் கதறல்...

முன்னதாகவே ஆஸ்திரேலியாவுடன் சீனாவின் வர்த்தக உறவு மோசமடைந்தது. இரண்டு நாடுகளுமே ஒரு சில பொருட்களுக்கு தடை விதித்தும் குறிப்பிடத்தக்கது.

சீனா தற்பொழுது வரிசையாக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுடன் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் சமீபத்தில் சீனா தங்கள் நாட்டில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டிய ரஷ்யா சீனாவுக்கு தருவதாக இருந்து அதிநவீன ஏவுகணைகள் ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

அதுமட்டுமல்லாமல் தென்சீனக்கடல் விவகாரத்தில் வியட்நாம் உள்ளிட்ட பல தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் சீனா பகைமை பாராட்டி வருகிறது. அதே போல ஜப்பான் நாட்டுடனும் சீனா மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இது மட்டுமல்லாமல் தைவானும் சீனாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. தற்பொழுது சுற்றிலும் பகைவர்களை வளர்த்து வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்க அதிபர் டிரம்ப் சிகிச்சை பெறும் ராணுவ மருத்துவமனை அருகே கிடந்த மர்ம பையால் பரபரப்பு…

naveen santhakumar

15 மனைவிகளுக்கு 19 ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்கிய ஆப்பிரிக்க மன்னர்

Admin

முஸ்லிம்களுக்கான தடை நீக்கம்; பதவி ஏற்ற முதல் நாளே ஜோ பைடன் அதிரடி !

News Editor