இந்தியா

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: பிரதீப் சிங் முதல் இடம்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

2019 சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) அறிவித்துள்ளது. 

மத்திய அரசு துறைகளில் உள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணியிடங்களுக்கான தேர்வுகளை யூபிஎஸ்சி ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. 

அதன்படி கடந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், பிரதீப் சிங் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஜெகின் கிஷோர் என்பது இரண்டாவது இடமும் பிரதிபா வர்மா என்பவர் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளார்.

இதில், பெண் தேர்வர்களில் பிரதிபா வர்மா என்பவர் முதலிடம் பெற்றுள்ளார். 

2019 சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் பல்வேறு அதிகாரிகள் பணியிடங்களுக்கு மொத்தம் 829 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிவில் சர்வீசஸ் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் நேர்காணல் நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களின் இறுதி முடிவுகளே இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

இதில் பிரதீப் சிங் (22) என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். பிஹாரின் கோபல்கஞ்ச் பகுதியை சேர்ந்த இவர்கள் தற்பொழுது இந்தூரில் வசித்து வருகிறார்கள். பிரதீப் சிங்கின் தந்தை மனோஜ் சிங் பெட்ரோல் நிலையம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். பிகாம் பட்டதாரியான பிரதீப் சிங் மிக இளம் வயதிலேயே யுபிஎஸ்சி தேர்ச்சி பெற்றுள்ளார்.

ALSO READ  18 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு உத்தரவு…!

இதில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினருக்கான ஒதுக்கீடு முதன்முறையாக இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு மூலம் 78 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், 11 தேர்வர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

இந்த 2020ம் ஆண்டுக்கான யூபிஎஸ்சி தேர்வு மே.31ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. எனினும், கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக அந்த தேர்வு தேதிகள் அக்.4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முதல் 50 இடங்களைப் பிடித்தவர்களின் பட்டியல்:-

S.NO.    ROLL NO    NAME

1    6303184    Pradeep Singh

2    834194    Jatin Kishore

3    6417779    Pratibha Verma

4    848747    Himanshu Jain

5    307126    Jeydev C S

6    5917556    Vishakha Yadav

7    4001533    Ganesh Kumar Baskar

8    418937    Abhishek Saraf

9    6303354    Ravi Jain

10    712529    Sanjita Mohapatra

11    5813443    Nupur Goel

12    214364    Ajay Jain

13    631338    Raunak Agarwal

14    405090    Anmol Jain

15    515674    Bhosle Neha Prakash

16    6419694    Gunjan Singh

17    876541    Swati Sharma

18    833281    Lavish Ordia

ALSO READ  பிரபல வயலின் இசைக்கலைஞர் டி.என்.கிருஷ்ணன் மறைந்தார்:

19    830832    Shrestha Anupam

20    5806038    Neha Banerjee

21    870407    Pratyush Pandey

22    6622267    Patki Mandar Jayantrao

23    6301851    Nidhi Bansal

24    825069    Abhishek Jain

25    850640    Shubham Aggarwal

26    6401083    Pradeep Singh

27    867471    Himanshu Gupta

28    867400    Chandrajyoti Singh

29    841628    Mayank Mittal

30    7111209    Pari Bishnoi

31    4902723    Simi Karan

32    818608    Geetanjali Sharma

33    842160    Navneet Mann

34    5803548    Apurv Chauhan

35    6309267    Kanchan

36    2000141    Saranya R

37    809220    Natisha Mathur

38    3409693    Abhishek Augustya

39    825660    Ruchi Bindal

40    1911734    Aswathy Srinivas

41    829260    Ayushi Jain

42    818704    Dipankar Choudhary

43    846313    Shubham Bansal

44    6626157    Kulkarni Ashutosh C

45    1902112    Safna Nazarudeen

46    1022245    Pedditi Dhatri Reddy

47    1200993    Ishwarya R

48    519095    Deepak Babulal Karwa

49    806538    Yuvraj Seddharth

50    1106128    Shishir Gupta

கடந்த 10 ஆண்டுகளில் முதலிடம் பெற்றவர்களின் விபரம்:-


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“கவனமாக இருங்கள்…எந்த நேரமும் நீங்கள் கொல்லப்படலாம்” : முதல்வருக்கு கொலைமிரட்டல்

News Editor

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த கொத்தமல்லி செடி…

naveen santhakumar

சர்தார் வல்லபாய் படேல் சிலையை காண ரயில்வேத்துறை சுற்றுலா ரயில் அறிமுகம்

News Editor