இந்தியா

14 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த பரிசை மீட்டு கொடுத்த போலீசார்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:-

14 ஆண்டுகளுக்கு முன்பு ரயிலில் தொலைந்த பர்ஸ்சை ரயில்வே போலீசார் மீட்டு உரிய நபரிடம் ஒப்படைத்த சுவாரஸ்ய சம்பவம் மும்பையில் நிகழ்ந்துள்ளது.

மும்பை அருகே பான்வெல் பகுதியைச் சேர்ந்த ஹேமந்த் படால்கர் (Hemant Padalkar). இவர் கடந்த 2006ஆம் ஆண்டு சத்ரபதி சிவாஜி ரயில்வே முனையத்தில் (Chhatrapati Shivaji Maharaj) இருந்து பான்வெல் (Panvel) பகுதிக்கு லோக்கல் ட்ரெயினில் சென்றுள்ளார். அப்பொழுது தனது பஸ்சை தொலைத்து விட்டார். 

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் வன்சி (Vashi) ரயில்வே போலீசாரிடமிருந்து ஹேமந்த் படால்கர்-க்கு அழைப்பு வந்துள்ளது. அதாவது 14 வருடங்களுக்கு முன்னர் தொலைந்து போன அவரது அரசை கண்டித்துள்ளதாக வன்சி ரயில்வே போலீசார் கூறியுள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக அவரால் தனது பர்ஸை பெற இயலவில்லை. இந்நிலையில் சமீபத்தில் தனது பரிசை பெற்றுக்கொண்டார் ஹேமந்த்.

ALSO READ  அடப்பாவிங்களா!! சாப்பாட்டுல உப்பு கம்மியா இருந்தது ஒரு குத்தமா…. மனைவியை அடித்துக் கொன்ற கணவன்:

இதுதொடர்பாக ஹேமந்த் கூறுகையில்:-

கடந்த 2006ம் ஆண்டு மும்பை புறநகர் ரயிலில் சென்ற பொழுது எனது பரிசை தொலைத்துவிட்டேன், அந்த சமயத்தில் எனது பர்ஸில் நான்கு 100 ரூபாய் மற்றும் ஒரு பழைய 500 ரூபாய் என மொத்தம் 900 ரூபாய் இருந்தது. எனது பரிசை பெற்றுக் கொண்டபோது ரயில்வே போலீசார் 300 ரூபாயை திரும்ப அளித்தனர், இதில் 100 ரூபாயை ஸ்டாம்ப் சார்ஜாக எடுத்துக்கொண்டனர், மீதம் இருந்த பழைய 500 ரூபாய் 2016 ஆம் ஆண்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த பணத்தை வங்கிக்கு அனுப்பி உள்ளனர். புதிய 500 ரூபாய் வந்த பிறகு பெற்றுக் கொள்ளுமாறு கூறி உள்ளனர் என்றார்.

ALSO READ  மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து 11 பேர் பலி...8 பேர் படுகாயம்...

எனினும், இந்தப் பர்ஸ் ரயில்வே போலீசாருக்கு எப்போது? எப்படி? கிடைத்தது என்பது பற்றிய விவரங்கள் எதுவும் ரயில்வே போலீசார் தெரிவிக்கவில்லை.

14 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன பர்ஸ் மீண்டும் கிடைத்துள்ளது, என்பதோடு அவர் வைத்திருந்த பணமும் குறையாமல் அப்படியே இருந்துள்ளது என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியாவில் ஜனவரி 2 முதல் கொரோனா தடுப்பூசி : மத்திய அரசு அறிவிப்பு 

News Editor

ஒருதலை காதலால் நேர்ந்த சோகம்…..தடுக்க வந்த தங்கைக்கும் கத்திகுத்து…!!!!

Shobika

Vulkan Vegas Recenzja 2023: 6000 Zł I 150 Darmowych Spinó

Shobika