இந்தியா

மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து 11 பேர் பலி…8 பேர் படுகாயம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:

மராட்டிய மாநிலத்தில் நேற்று முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

இந்நிலையில், கனமழை காரணமாக மும்பையின் மாலட் மேற்கு பகுதியில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் முதல்கட்டமாக 9 பேர் உயிரிழந்தனர். தற்போது கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த மேலும் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

ALSO READ  14 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த பரிசை மீட்டு கொடுத்த போலீசார்… 

இதனால், குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. மேலும், காயங்களுடன் மீட்கப்பட்ட 8 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டிட இடிபாட்டில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால், மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நிகழ்விடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்த மராட்டிய மந்திரி அஸ்லாம் ஷைக், மும்பையில் பெய்த கனமழை காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்துள்ளதாகவும் மீட்பு பணிகள் தொய்வின்றி நடப்பதாகவும் குறிப்பிட்டார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தெலங்கானா என்கவுண்டர் குறித்து நடிகை சமந்தா ட்விட்டர் பதிவு…

Admin

கொரோனா தடுப்பூசி இன்று முதல் துவக்கம் !

News Editor

கடற்கரையை நோக்கிச் செல்லும் லட்சக்கணக்கான ஆலிவ் ரிட்லி ஆமைகள்- வைரல் வீடியோ…

naveen santhakumar