ஜோதிடம்

நீங்கள் இப்படி சாப்பிடுபவராக இருந்தால்….. நிச்சயம் உங்கள் வீட்டில் தரித்திரம் கங்ணம் ஸ்டைலில் நடனமாடும்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சாப்பிடுவதற்கும், சாஸ்திரத்துக்கு என்னய்யா சம்பந்தம்??? என்று கேட்டீங்கன்னா… சாப்பிடுவதில் இருக்கிற சாஸ்திரமும் நம்மள கண்டிப்பா வெச்சு செய்யும்னு தான் பதில் சொல்ல முடியும். அந்த அளவுக்கு சாப்பாட்டில் சாஸ்திரம் உள்ளது.

நமது முன்னோர்கள் ஒவ்வொரு விஷயத்திற்கும், ஒவ்வொரு சாஸ்திரங்களை வைத்துள்ளனர்.அது அறிவியல் ரீதியாகவும் நிரூபணமாகியுள்ளது. எனவே அவர்களை முன்னோர்கள் என்று சொல்வதைவிட விஞ்ஞானிகள் என்று சொல்வது சால சிறந்தது.

அதன் அடிப்படையில் நாம் எப்படி சாப்பிட வேண்டும்??? எப்படியெல்லாம் சாப்பிடக் கூடாது?? என்று பார்ப்போம்.

ஒரு சிலர் சாப்பிடுவதை பார்க்கும் பொழுது, மற்றவர்களுக்கு அருவருப்பாக இருக்கும். இலையை நன்கு வழித்து ஒரு விரலில் கூட பருக்கை ஒட்டி இல்லாதவாறு நன்கு விரலை சப்பிக் எடுத்து விடுவர். இப்படி நன்கு வழித்து சாப்பிடுபவர்களின் வீட்டில் தரித்திரம் உண்டாகும்.

பசிக்கும் பொழுது மட்டுமே சாப்பிட வேண்டும். அதுமட்டுமல்லாது அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடலில் நோய் தங்கும். வயிறு முட்ட ஃபுல் கட்டு கட்ட கூடாது. கிழக்கு நோக்கி சாப்பிட்டால் ஆயுள் பெருகும், தெற்கு நோக்கி சாப்பிட்டால் புகழ் உண்டாகும், மேற்கு திசை நோக்கி சாப்பிட்டால் செல்வம் உண்டாகும், வடக்கு திசை நோக்கி சாப்பிடக்கூடாது.

ALSO READ  ஆண்களின் சக்தியை அதிகரிக்கும் சிதறு தேங்காய்…

நாம் சாப்பிடும் உணவில் மிளகு, சீரகம், இஞ்சி போன்றவை கட்டாயம் இடம்பெறவேண்டும். மிளகு உடலுக்கு குளிர்ச்சியை தரும். சீரகம் உடலை சீராக வைத்திருக்கும். சீர்+அகம். அதேபோல், இஞ்சி செரிமானத்தை தரும், அதோடு குளிர்ச்சியையும் தரும். வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் காலையில் குடித்துவந்தால், உடல்குளிர்ச்சி அடைந்து அந்த நாள் முழுவதும் டென்ஷன் இல்லாமல் இருக்கும்.

சாப்பிடுவதற்கு முன்பு கை, கால், வாய் முதலியவற்றை கழுவி விட்டு வந்து அமரவேண்டும். காலில் உள்ள ஈரம் உணர்வதற்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும். மேலும் கதவினை திறந்து வைத்துக்கொண்டு சாப்பிடக்கூடாது. சாப்பிடும்பொழுது வீட்டின் கதவு மூடி இருக்க வேண்டும். சாப்பிடும் பொழுது இடது கையை கீழே ஊன்ற கூடாது. செருப்புப் போட்டுக் கொண்டும், அரட்டை அடித்துக்கொண்டும், மொபைல் நோண்டிக்கொண்டும், சாப்பிடக்கூடாது.

ALSO READ  எங்கடா என்னோட Teddy ... தெறிக்கவிட்ட மீம்ஸ்கள்

சூரியன் உதயம் மற்றும் அஸ்தமனத்தின் போது சாப்பிடக்கூடாது கோபத்துடனும் இருப்பான இடத்திலும் இடையில் எழுந்து போய்த் திரும்பி வந்து சாப்பிடக் கூடாது.

அரச இலையில் சாப்பிட்டால் புத்தி கூர்மையும், வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் அழகும், ஆரோக்கியமும் உண்டாகும். செம்பு மற்றும் வெண்கலப் பாத்திரங்களில் சமைக்கக்கூடாது. நாம் சாப்பிடும் தட்டை தவிர நம்மை சுற்றியுள்ள மத்த உணவு பதார்த்த பொருட்கள் மூடி இருக்க வேண்டும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் என்னென்ன? முதல்வர் அறிவிப்பு…

naveen santhakumar

4 மொழிகளில் வெளியாகும் விஷாலின் ‘சக்ரா’… 

naveen santhakumar

மாசி மாத பலன்கள்… படிப்படியாக முன்னேறும் சிம்ம ராசிக்காரர்களே…

Admin