சாதனையாளர்கள்

2020-ம் ஆண்டில் நல்லாசிரியர் விருது பெறும் தமிழக ஆசிரியர்கள்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை: 

நாட்டில் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட தேசிய நல்லாசிரியர் விருது பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர்.செப்டம்பர் 5ம் தேதி ‘ஆசிரியர் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதையொட்டி மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

ஆசிரியராக இருந்து “குடியரசுத் தலைவராக” உயர்ந்த சர்வபள்ளி “ராதாகிருஷ்ணனை” போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான “செப்டம்பர் 5″ஆம் தேதி “ஆசிரியர் தினமாகக்” கொண்டாடப்படுகிறது. 

நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு இந்நாளில் “தேசிய நல்லாசிரியர் விருது” வழங்கப்படுகிறது. 2020ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெற உள்ளவர்களின் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் தற்போது  வெளியிட்டிருக்கிறது.

சிறப்பு பிரிவில் 2 ஆசிரியர்கள் என மொத்தம் 47 ஆசிரியர்கள் “தேசிய நல்லாசிரியர் விருது” பெற தேர்வாகி உள்ளனர். அதில், தமிழகத்தில் இருந்து சென்னை அசோக்நகரில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் “ஆர்.சி.சரஸ்வதி”, விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் “எஸ்.திலீப்” ஆகியோர் “தேசிய நல்லாசிரியர் விருது”க்கு தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.

ALSO READ  ஜெயலலிதா தன்னுடைய முதல் திரைப்படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை அசோக்நகர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.சி.சரஸ்வதி கடந்த 32 ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் இருந்து வருகின்றார். விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்து  செய்தியாளர்களிடம் பேசிய ஆசிரியர் சரஸ்வதி, 

“இது என்னுடைய தனிப்பட்ட முயற்சிக்கு கிடைத்த வெற்றி அல்ல என்று கூறியுள்ளார்.மேலும், என்னுடைய பள்ளியில் என்னுடன் சேர்ந்து பணியாற்றும் சக ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகளின் கூட்டு முயற்சி ஆசிரியர்களின் ஒத்துழைப்பால் எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது” என்று கூறியுள்ளார்.

ALSO READ  மனநலம் குறித்த விழிப்புணர்வுக்காக சர்வதேச கிறிஸ்டல் விருது பெற்றார் : தீபிகா படுகோனே

தேசிய நல்லாசிரியர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் டெல்லி “விக்யான் பவனில்” (vigyan bhawan)செப்டம்பர் 5ஆம் தேதியன்று குடியரசுத் தலைவர் “ராம்நாத் கோவிந்த்” கையால் விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எட்டாம் வகுப்பு மாணவனின் அசத்தலான கண்டுபிடிப்பு….. சமூக வலைதளங்களுக்கு டஃப் கொடுக்கும் பிக்கிராபி செயலி:

naveen santhakumar

அறிவியலாளர் ஜகதீஷ் சந்திர போஸ் மறைந்த தினம்

Admin

சில மனிதர்கள் – சில நினைவுகள் பகுதி -10 (வரலாறு)

News Editor