உலகம்

நவாஸ் ஷெரீப்பை பாகிஸ்தான் கொண்டுவர தீவிர ஏற்பாடு:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இஸ்லாமாபாத் :

பிரிட்டன் நாட்டில் தங்கியுள்ள, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, அதிகாரிகளிடம் பிரதமர் இம்ரான் கான் கட்டளை விடுத்துள்ளார்.

அந்நிய நாடான பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தலைவருமான நவாஸ் ஷெரீப், இரு வகையான ஊழல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவர் நோயுற்ற நிலையில் சிகிச்சை பெறுவதற்கு, நீதிமன்ற அனுமதியுடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் லண்டன் சென்ற அவர், ஜாமின் காலம் முடிந்தும் இன்னும் நாடு திரும்பவில்லை.

ALSO READ  நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு 15 மாதங்கள் சிறை :

இதனால், நீதிமன்றத்தில் ஆஜராகாத அவருக்கு, கடந்த மாதம் 15ம் தேதி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் கைது செய்யுமாறு உத்தரவினை பிறப்பித்ததோடு மட்டுமல்லாமல், “வழக்கு விசாரணையில், ஒருவரை ஆஜர்படுத்த வேண்டியது, அரசாங்கத்தின் பொறுப்பு” என்றும் சுட்டிக்காட்டியது.

இது தொடர்பாக, பிரதமர் இம்ரான் கான் தலைமையில்,அவசரமாக நேற்று முன்தினம் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், நவாஸ் ஷெரீப்பை கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை,அது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று இம்ரான் கூறியுள்ளார்.

ALSO READ  புபோனிக் பிளேக் மரணம் சீனாவில் கிராமம் சீல் வைப்பு... 

இது குறித்து, கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஒருவர் “நவாஸ் ஷெரீபை எங்களிடம் ஒப்படைக்கும்படி, பிரிட்டன் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். எங்களுக்கும் பிரிட்டனுக்கும் இடையே, ஆட்களை ஒப்படைப்பது தொடர்பாக, ஒப்பந்தம் ஏதும் இல்லை.ஆனால், சிறப்பு ஏற்பாட்டின் கீழ், அவர்கள் நவாஸ் ஷெரீபை ஒப்படைக்க முடியும்”.என்று அவர் கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை கடித்து குதறிய கரடி…..!!!

Shobika

ஜி 7 அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக சேர்க்கப்பட வேண்டும்; ஜி 7 மாநாட்டை ஒத்திவைக்கிறேன்- ட்ரம்ப்…

naveen santhakumar

கொரோனா பரவல்: பாலஸ்தீனிய கலைஞர் உருவாக்கிய சப்பாத்திக் கள்ளி முகக் கவசங்கள்…. 

naveen santhakumar