உலகம்

ஜி 7 அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக சேர்க்கப்பட வேண்டும்; ஜி 7 மாநாட்டை ஒத்திவைக்கிறேன்- ட்ரம்ப்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்..

ஜூன் மாதம் இறுதியில் நடக்கும் ஜி-7 நாடுகள் மாநாட்டை நான் செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கிறேன், இந்த மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளும் அழைக்கப்பட வேண்டும் என அமெரிக்கஅதிபர் ட்ரம்ப் திடீரென அறிவித்தார்.

ஃப்ளோரிடாவில் ஸ்பேஸ் எக்ஸ் தனியார் ராக்கெட் ஏவுதலுக்குப் பிறகு தமது விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்தியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளை சேர்க்காவிட்டால் ஜி 7 கூட்டமைப்பால் எந்த பயனும் இல்லை என தெரிவித்துள்ளார். இதற்கு முன்னரே நடந்த பல்வேறு கூட்டங்களில் ரஷ்யாவை ஜி7 கூட்டமைப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தி உள்ளார். 

ஜி-7 நாடுகள் கூட்டமைப்பில் உலகின் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட, வளர்ச்சியடைந்த நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரி்ட்டன், கனடா ஆகிய நாடுகள் மட்டும் பங்கேற்கும் மாநாடாகும். இந்த நாடுகளின் தலைவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கலந்து பேசி பொருளாதார பிரச்சினைகளை, வர்த்தகம் உள்ளிட்ட விஷயங்களை பேசித்தீர்த்துக்கொள்வார்கள்.

இந்த ஆண்டு ஜி-7 நாடுகள் மாநாட்டை அமெரிக்கா நடத்துகிறது. ஜி-7 மாநாட்டின் தலைவரான அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஓரிரு நாடுகளின் தலைவர்களை சிறப்பு விருந்தினர்களை அழைக்க முடியும். 

ALSO READ  கொரோனா பரவல்: 1500 ஊழியர்களை அதிரடியாக நீக்கிய ட்ரம்ப் நிர்வாகம்....

கடந்த ஆண்டு பிரான்ஸில் நடந்த ஜி-7 மாநாட்டில் அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரதமர் மோடியை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சூழலில் ஜி-7 நாடுகள் மாநாடு ஜூன் 10-12 வரை அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக ஜூன் மாத இறுதிக்கு மாற்றப்பட்டிருந்தது. இந்த சூழலில் அந்த மாநாட்டை செப்டம்பரில் மாற்றி அதிபர் ட்ரம்ப் அதிரடியாக முடிவு செய்துள்ளார்.

மேலும், ஜி-7 நாடுகள் மாநாடு என்பது, உலகில் என்ன நடக்கிறது என்பதை முறைப்படி வெளி்ப்படுத்தும் மாநாடாக இல்லை, ஏதோ காலாவதியான நாடுகளைக் கொண்ட மாநாடு போல் இருக்கிறது என நான் நினைக்கிறேன் என தெரிவித்தார்

வெள்ளை மாளிகையின் தகவல்தொடர்பு இயக்குநர் அலிசா அலெக்சான்ட்ரா பாரா (Alyssa Farah) கூறுகையில்:-

ஜி-7 நாடுகள் மாநாட்டில் உறுப்புநாடுகள், நட்பு நாடுகளும் அழைக்கப்படும். இத்நாடுகளுடன் சீனாவுடன் எதிர்காலத்தில் எவ்வாறு அணுகுவது என்பது குறித்து பேசப்படும் எனத் தெரிவித்தார்.

ALSO READ  அமெரிக்க அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்த பிரேசில் உயர் அதிகாரிக்கு கொரோனா காய்ச்சல்......

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் முக்கிய அமெரிக்க தலைவர்கள் அனைவரும் கொரோனா பரவல் விஷயத்தில் சீனாவைத் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் ஹாங்காங் விவகாரத்திலும் சீனாவை கண்டித்திருந்தார் அதிபர் டிரம்ப். ஹாங்காங் விவகாரத்தில் சீனா முறையாக நடந்து கொள்ளவில்லை என்றால் அதற்கான பதிலடி தரப்படும் என்று இங்கிலாந்து சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஏனெனில் 1997ஆம் ஆண்டு வரை ஹாங்காங் பிரிட்டிஷ்-ன் காலனி பகுதியாக இருந்தது. 1997 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி ஹாங்காங் சீனாவுடன் தன்னாட்சி பகுதியாக இணைத்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் சீனா ஹாங்காங் விஷயத்தில் கடுமையான போக்கை கடைபிடித்தால் ஹாங்காங் மக்களுக்கு இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை வழங்கப்படும் என்று இங்கிலாந்து தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகளை சீனாவிற்கு எதிராக திருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.

இதனிடையே கொரோனா தொற்று குறையாத பட்சத்தில் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கமாட்டேன் என ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கல் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெண்களுக்கு எதிரான பாகுபாடு இருக்காது – தலிபான்கள் உறுதி

News Editor

கார்கள் இல்லாத கனவு நகரம்…! சவுதியின் பிரமாண்ட முயற்சி ! 

News Editor

அமைதிக்கான சர்வதேச பல தரப்பு உறவு மற்றும் ராஜதந்திர தினம்…..

naveen santhakumar