உலகம்

தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை கடித்து குதறிய கரடி…..!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த நர்ஸ் லியா லோகன்(65). இவர் தனது சகோதரி மற்றும் தோழியுடன் சேர்ந்து கலிபோர்னியாவில் இருந்து மொன்டானா மாகாணத்துக்கு சைக்கிளில் பயணம் செய்தார்.இவர்கள் 3 பேரும் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மொன்டானா மாகாணத்தின் ஓவாண்டே நகரை சென்றடைந்ததும், அங்கேயே ஓய்வு எடுக்க முடிவு செய்தனர். பின்னர் 3 பேரும் இரவு உணவை முடித்து விட்டு தனித்தனியாக குடில்கள் அமைத்து உள்ளே தூங்கினர்.

Woman killed by husband's 3 brothers in Pulianthope - DTNext.in

அப்போது நள்ளிரவில் அங்கு பெரிய கரடி ஒன்று வந்தது. அந்த கரடி குடிலில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த லியா லோகனை தரதரவென இழுத்து சென்று, கடித்து குதறியது.லியா லோகனின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த அவரது சகோதரி மற்றும் தோழி கையில் கிடைத்த பொருட்களை வீசி எறிந்து கரடியை விரட்டியடித்தனர். பின்னர் அவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த லியா லோகனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ALSO READ  சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு:
Pune: 29-year-old woman found murdered in apartment | Cities News,The  Indian Express

ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இந்த சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே வனத்துறை அதிகாரிகள் அந்த கரடியை தேடிக் கண்டுபிடித்து கொல்ல முடிவு செய்துள்ளனர். இதற்காக அந்த பகுதி முழுவதும் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தின் உறுப்பினர் பேராசிரியர் பிமல் படேல் சர்வதேச சட்ட ஆணையத்தின் உறுப்பினராக தேர்வு

News Editor

இது ஒரு மனித விரோதக் கொலை: பிரேதப் பரிசோதனை அறிக்கை… 

naveen santhakumar

ஐ.நா. வரை சென்ற சாத்தான்குளம் கொலை வழக்கு- முழு விசாரணை வேண்டும் ஐ.நா. பொதுச்செயலாளர்….

naveen santhakumar