உலகம்

அமெரிக்காவில் குளிர்காலம் ஆரம்பித்துள்ளதால் கொரோனா தொற்று கடுமையாக பரவும் அபாயம்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்: 

அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்கவின் 9 மாகாணங்களில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் ஒன்றை அளித்துள்ளது.

கென்டக்கி, மினசோட்டா, மாட்டானா, விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் நேற்று மட்டும் புதிதாக 49 ஆயிரம் புதிய நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கடந்த வாரத்தில் சனிக்கிழமையன்று  கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. 

ALSO READ  கொரோனா பாதிப்பின் இன்றைய நிலவரம்..!

கன்சாஸ், நெப்ராஸ்கா, நியூ ஹாம்ப்ஷயர், சவுத் டகோடா, வ்யோமிங் ஆகிய மாகாணங்களிலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.தற்போது அமெரிக்காவில் குளிர் காலம் துவங்கிவிட்டது. தட்பவெட்பம் 10 செல்சியஸ் அளவுக்கு குறைந்து விட்டது.

“குளிர்காலத்தில் கொரோனா தாக்கம் மேலும் அதிகரிக்கும். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்னும் சில நாட்களில் இந்த மாகாணங்களில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சமூக இடைவெளி உள்ளிட்ட விதிகளை கடைப்பிடிப்பதே தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கு ஏற்ற வழி” என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தொற்று அச்சம் காரணமாக ஒரு லட்சம் “மின்க்”களைக் கொல்ல முடிவு… 

naveen santhakumar

இதுதான் கொரோனோ வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறியா?

Admin

புயலுக்கு நடுவே சீறிய விமானம்… புதிய சாதனை படைத்த பிரிட்டிஷ் ஏர்வேஸ்

Admin