உலகம்

நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லாகூர் : 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம்  மீது, போலீசார் தேச துரோக வழக்கு ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்(70), ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றார். உடல்நிலை பாதிக்கப்பட்டதால், நீதிமன்ற அனுமதியுடன் சிகிச்சைக்காக பிரிட்டன் தலைநகர் லண்டன் சென்றார்.பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தலைவரான நவாஸ் ஷெரீப், அந்நாட்டின் பிரதமராக 3 முறை பதவி விகித்தவர்.

இதற்கிடையே தற்போதைய பிரதமர் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் லண்டனில் இருந்து, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, தன் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய நவாஸ் ஷெரீப், பிரதமர் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.

அதில் அவர் “பாகிஸ்தான் ராணுவம் 2018 தேர்தலில் செய்த முறைகேடுகளால், இம்ரான் கான் ஆட்சியை பிடித்தார். ராணுவம் அரசியலில் தலையிடுவதுடன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் நீதித்துறைக்கு எதிராக செயல்படுகிறது.எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம், பிரதமருக்கு எதிரானது அல்ல. இதுபோன்ற செயல் திறனற்ற, தகுதியற்ற ஒருவரை, பிரதமர் பதவியில் அமர வைத்த மக்களுக்கு எதிராகவே போராட்டம் நடத்தப்படுகிறது”, என்று  கூறினார்.

ALSO READ  தடுப்பூசி போடலைனா சிம் கார்டு கனெக்சன் கட்- அரசு எச்சரிக்கை …!

மேலும், ராணுவ தலைமை ‘ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா’ மீதும், பல்வேறு குற்றச்சாட்டுகளை நவாஸ் ஷெரீப் கூறினார். இதையடுத்து நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் மற்றும் அவர்களது கட்சி தலைவர்கள் மீது, ராணுவம் மற்றும் நீதித்துறைக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய குற்றத்திற்காக  தேசத் துரோகம் உட்பட கடுமையான பிரிவுகளில், பாகிஸ்தான் போலீசார், நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜோ பிடன் பதவியேற்பையொட்டி வாஷிங்டன் பகுதி முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது

naveen santhakumar

கனடாவில் இந்திய மாணவி தாக்கப்பட்ட விவகாரம்-மாணவியின் பெற்றோர் கனடா செல்ல விசா ஏற்பாடு : வெளியுறவுத் துறை அமைச்சர்

Admin

அலுவலக நேரத்தில் சிகரெட் பிடிக்காமல் இருந்தால் 6 நாட்கள் எக்ஸ்டிரா விடுமுறை

Admin