உலகம்

தடுப்பூசி போடலைனா சிம் கார்டு கனெக்சன் கட்- அரசு எச்சரிக்கை …!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இஸ்லாமாபாத்:-

தடுப்பூசி போடலைனா சிம் கார்டுகளின் இணைப்பு முடக்கப்படும் என்று பஞ்சாப் மாகாண அரசு எச்சரித்துள்ளது.

Punjab province in Pakistan to block SIM cards and salaries of unvaccinated  people | The National

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டுவதால், இதனை போக்க தடுப்பூசி போடாத நபர்களின் சிம் கார்டுகளின் இணைப்புகள் முடக்கப்படும் என அந்த மாகாணத்தின் சுகாதார துறை அமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கொரோனாவை முறியடிக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வது தான் ஒரே தேர்வு என உலக பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனால் பல்வேறு நாடுகள் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

Punjab province in Pakistan to block SIM cards and salaries of unvaccinated  people | The National

இந்நிலையில், பாகிஸ்தானில் மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பெருவாரியான மக்கள் முன்வரதாதல், அவர்களின் சிம் கார்டு இணைப்பை முடக்குவது என்ற தடாலடி முடிவை அந்த மாகாண அரசு எடுத்துள்ளது.

ALSO READ  சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை…!

சிம் கார்டு இணைப்பை முடக்குவதுமட்டுமல்லாமல் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு சம்பளத்தையும் நிறுத்திவைக்க மாகாண அரசு முடிவு செய்துள்ளது.

ஏனெனில், பஞ்சாப் மாகாணத்தில் தடுப்பூசி செலுத்த அரசு நிர்ணயித்த இலக்கை அடைய முடியாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ  கும்பமேளாவில் குவிந்த பக்தர்கள்; காற்றில் பறக்கும் கொரோனா கட்டுப்பாடு !

அதே நேரத்தில் பாகிஸ்தானில் முதல் டோஸ் தடுப்பு மருந்தை செலுத்திக் கொண்ட மக்கள் தற்போது, இரண்டாவது டோஸை செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டாததும் இதற்கு ஒரு காரணம்.

பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 95,59,910 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக பாகிஸ்தானின் மக்கள் தொகையில் 1.2 சதவிகிதம் பேர் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மீண்டும் நாய்,பூனை, வௌவால் விற்பனையை ஆரம்பித்தது சீனா…

naveen santhakumar

சிறார்களுக்கான மரணதண்டனை ரத்து- சவுதி அரேபியா….

naveen santhakumar

இன்று சர்வதேச புலிகள் தினம்..! 

naveen santhakumar