இந்தியா

நாளை மறுநாள் தொடங்குகிறது திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவானது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி பிரம்மோற்சவ விழா நாளை மறுநாள் (16-ந் தேதி) தொடங்க இருக்கிறது. 

தொடர்ந்து 24-ம் தேதிவரை நடக்கும் இந்த விழா நாட்களில் தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், திருமஞ்சனம் நடக்கிறது. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கோவில் மாடவீதிகளில் நடைபெறும் வாகன சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் வாகன சேவை நடக்கிறது.

ALSO READ  தொழில் சிறக்க..!!!லாபம் பெருக..!!!இந்த ஸ்லோகத்த டெய்லி சொல்லுங்க...அப்புறம் பாருங்க டாப்பா வருவீங்க…!!!!!

இந்த நிலையில் நவராத்திரி பிரம்மோற்சவம் குறித்த ஆலோசனை கூட்டம் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஜவகர் ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் துணை அதிகாரி வசந்த்குமார், கலெக்டர் நாராயண பரத்குமார், டி.ஐ.ஜி. காந்திரானா டாடா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் விழா ஏற்பாடுகள் குறித்து ஜவகர் ரெட்டி கூறுகையில், “கடந்த 1-ந் தேதி நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாடவீதிகளில் வாகன சேவை நடத்த அனுமதியளிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவலால் மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்பேரில் மாடவீதிகளில் வாகனசேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  திருப்பதி கோவிலில் உரிய மரியாதை தரப்படவில்லை; நடிகை ரோஜா குற்றசாட்டு!

பிரம்மோற்சவத்தின்போது 300 ரூபாய் சிறப்பு தரிசனம், ஸ்ரீவாரி டிரஸ்ட் பக்தர்கள் மற்றும் வி.ஐ.பி. பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்” என்றார். தொடர்ந்து லட்டு பிரசாதம், அன்னபிரசாதம் தயாரிக்கும் இடங்களில் அவர் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

5 மாநில தேர்தல் எப்போது?… இன்று பிற்பகல் முக்கிய அறிவிப்பு!

naveen santhakumar

மகாராஷ்டிரா முழுவதும் செக்சன் 144 அமல்- உத்தவ் தாக்கரே…..

naveen santhakumar

‘சுடோக்கு’ விளையாட்டினை உருவாக்கியவர் மரணம் :

Shobika