தமிழகம்

நாளை 1 மணியிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது 25-ந்தேதி ‘நிவர் புயலாக’ மாறி கரையை கடக்க இருக்கிறது. இந்த புயல் அதிதீவிர புயலாக மாறவும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அதிதீவிர புயலாக மாறினால் 100 கி.மீட்டருக்கு அதிகமான வேகத்தில் காற்று வீசக்கூடும். இந்த காற்றழுத்தத்தாழ்வு மற்றும் புயல் காரணமாக நாளையில் இருந்து வியாழக்கிழமை வரை மூன்று நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நிவர் புயல் முன்னெச்சரிக்கை குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். அதன்பின் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, நாகை ஆகிய ஏழு மாவட்டங்களில் நாளை மதியம் 1 மணி முதல் பொது போக்குவரத்து நிறுத்தப்படும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மறு அறிவிப்பு வரும்வரை இந்த போக்குவரத்து இயங்காது எனத் தெரிவித்துள்ளார்.

ALSO READ  யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் கொள்ளுப் பேத்தி… 

பொதுமக்கள் கூடுமான அளவிற்கு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியதோடு, ரேசன் கார்டு போன்ற முக்கியமான ஆவணங்களை தண்ணீர் படாத இடங்களில் பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்

News Editor

நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்பு

News Editor

கனமழை எச்சரிக்கை – 26 மாவட்டங்களுக்கு விடுமுறை!

naveen santhakumar