சினிமா

தமிழ் சினிமாவில் ரஜினிக்கு மட்டுமே கிடைக்கும் அங்கீகாரம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் ரஜினியின் தர்பார் படத்திற்கு விமானத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டு பிரமோஷன் செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் வயதானாலும் தனது ஸ்டைலால் இன்றைய இளம் தலைமுறை நடிகர்களுக்கும் போட்டியாக திகழ்ந்து வருகிறார்.

இவர் தற்போது “தர்பார்” படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசை அமைக்க லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள “தர்பார்” படத்தின் பிரமோஷன் வேளைகளில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் ரஜினியின் தர்பார் படத்தின் போஸ்டர் விமானங்களில் ஒட்டப்பட்ட புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வருகிறது. மேலும் இதற்கு முன்பாக ரஜினி நடிப்பில் வெளியான கபாலி படத்திற்கு தான் முதன்முறையாக இது போன்ற பிரம்மாண்ட விளம்பரங்கள் செய்யப்பட்டன. தற்போது தர்பார் படத்திற்கும் அப்படியான விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது ரஜினிக்கு மட்டுமே கிடைக்கும் அங்கீகாரம் என ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்,


Share
ALSO READ  படப்பிடிப்பின்  இறுதி நாளை கேக் வெட்டி கொண்டாடிய 'சார்பட்டா பரம்பரை' படக்குழு  
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகை அனுஷ்கா சினிமாவை விட்டு விலக முடிவு?… 

naveen santhakumar

‘உன்னை மிஸ் பண்றேன் நண்பா’ கே.வி ஆனந்த் மறைவுக்கு இயக்குநர் ஷங்கர் இரங்கல் !

News Editor

டப்பிங் பணியை தொடங்கிய அருண் விஜய் !

News Editor