சினிமா

‘தனுஷ் 43’ படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதும் பிரபல பாடலாசிரியர்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் தனுஷ் ஜகமே தந்திரம், கர்ணன்,  ‘அட்ராங்கி ரே’    போன்ற படத்தில்  வடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் 43 படத்தினை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்  “துருவங்கள் 16” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

இந்த படம் வெளியாகி அனைத்து தரப்பினரிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. அதனையடுத்து நடிகர் அருண் விஜய்யை வைத்து “மாஃபியா” படத்தினை இயக்கி இருந்தார். ஆனால் இந்த படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் தனுஷ் 43 படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

அதனையடுத்து இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனங்களை பாடலாசிரியர் விவேக் எழுத்தவுள்ளதாக படத்தினை தயாரிக்கும் சத்யா ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இவர் படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதுவது இதுவே முதல் முறையாகும்.

ALSO READ  மாசி மாத பலன்கள்… வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் கடக ராசிக்காரர்களே..

மேலும் பாடலாசிரியர் விவேக் ஆளப்போறன் தமிழன், சிங்கப்பெண்ணே, வெய்யோன் சில்லி, வெறித்தனம், ராகிட ராகிட போன்ற பல பிரபல பாடல்களை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

#dhanush43 #vivek #viveklyricist #Tamilthisai #karthiknaren


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

2020 ல் டாப் 10 ட்வீட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த நடிகர்கள், நடிகைகள்…

News Editor

பிரபல பின்னணி பாடகி அனுராதா பட்வல் மரணம்:

naveen santhakumar

ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்த பார்த்திபன் !

News Editor